வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

யார்யா இந்த கேரக்டர்.. O2 படத்திலும் முத்திரை பதித்த ஹலோ கந்தசாமி

நாம் படங்களில் பார்க்கும் சில கேரக்டர்கள் ஒரு காட்சியில் வந்தாலும் மனதும் ஆழமாக நிற்கும் படியாக நடித்திருப்பார்கள். அப்படி அவர்களின் பெயர் தெரியாமலே பல படங்களில் நடித்த இன்று வரை நம் மனதில் நிலைத்து நிற்கக்கூடியவர்களில் ஒருவர்தான் ஹலோ கந்தசாமி.

இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வெறும் கந்தசாமியாக இருந்த இவரை பூ படத்தின் இயக்குனர் சசி ஹலோ கந்தசாமியாக மாற்றினார். நாடக கலைஞராக இருந்த இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

சமுத்திரக்கனியின் சாட்டை படத்தில் செவிட்டு வாத்தியாராக நடித்திருப்பார். தன்னுடைய குரலாலும், நடிப்புத் திறமையாலும் மற்ற நடிகர்களைக் காட்டிலும் தனித்து தெரிந்தார். மைனா படத்தில் பஸ் பயணியாக வந்து அனைவரையும் அசத்தி இருந்தார் ஹலோ கந்தசாமி.

மேலும், அஜித்தின் வீரம் படத்திலும் நடித்திருந்தார். வாகை சூடவா, சாட்டை, குட்டிப்புலி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஐ என பல படங்களில் ஹலோ கந்தசாமி நடித்திருந்தார். தற்போது பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹலோ கந்தசாமி இன்னும் சில நாட்களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாற வாய்ப்புள்ளது.

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் O2 படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படத்திலும் தன்னுடைய முத்திரையை பதித்து விட்டு சென்றிருக்கிறார் ஹலோ கந்தசாமி. அனைவரிடத்திலும் அனுதாபமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார்.

ஆனால் இதுவரை இவரின் நடிப்பு திறமைக்கு சரியான அங்கீகாரம், விருதுகள் என எதுவுமே தற்போது வரை கிடைக்கவில்லை. ஆனால் விரைவில் ஹலோ கந்தசாமியின் நடிப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், அவருடைய ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Trending News