சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

ஒட்டுமொத்த கேரக்டர்களையும் மறக்க வைத்த சூர்யா.. ரோலக்ஸ் உருவானதன் பின்னணி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி பல நாட்கள் கடந்த பிறகும் ரசிகர்கள் ஆதரவுடன் நல்ல வசூல் லாபம் பார்த்து வருகிறது.

அந்தவகையில் படத்தில் இடம்பெற்றுள்ள கேரக்டர்கள் அனைத்தும் பலரையும் வியக்க வைத்தது. ஆனால் அந்த ஒட்டுமொத்த கேரக்டர்களையும் ரசிகர்கள் மறக்கும் அளவிற்கு சூர்யாவின் நடிப்பு இருந்தது. அவர் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரோலகஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள விட்டுள்ளார்.

இந்த கேரக்டரை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் பலரும் யோசிக்கும் ஒரே விஷயம் இப்படி ஒரு வில்லத்தனமான கேரக்டரில் நடிக்க சூர்யா எப்படி சம்மதித்தார் என்பதுதான். அதாவது இந்த படத்தில் முக்கிய வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். ஆனால் அவரே ரோலக்ஸ் என்ற நபரை பார்த்து மிரண்டு போவார்.

அப்படி என்றால் அதற்கு ஏற்றவாறு இருக்கும் ஒரு நபரைத்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று லோகேஷ் முடிவு செய்துள்ளார். அதற்காகத்தான் அவர் சூர்யாவை சந்தித்து இதுகுறித்து அரை மணி நேரம் பேசியிருக்கிறார்.

அவர் கூறிய அனைத்தையும் கேட்ட சூர்யா தனக்கு ஒரு நாள் டைம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பிறகு மறுநாளே அவர் லோகேஷுக்கு போன் செய்து தன் சம்மதத்தை தெரிவித்துள்ளார். முதலில் சூர்யா இதில் நடிப்பதற்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டார் என்றுதான் அவர் நினைத்துள்ளார்.

ஆனால் சூர்யா இதில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு பின்னால் இரண்டு காரணங்கள் இருக்கின்றது. ஒன்று அவர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் அவருக்காகத்தான் இந்த வாய்ப்பை அவர் ஏற்று நடித்தார். மற்றொன்று இப்போ இல்லேன்னா அப்புறம் எப்போ இந்த மாதிரி கேரக்டர்களில் நடிப்பது என்று அவர் லோகேஷிடம் தெரிவித்திருக்கிறார்.

இப்படித்தான் சூர்யா விக்ரம் திரைப்படத்தில் நடித்தார் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். மேலும் சூர்யா இந்தப் படத்தில் நடிப்பது ஒரு சிலரை தவிர படக்குழுவினர் யாருக்கும் அப்போது தெரியாது என்றும், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு தான் பலருக்கும் ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News