நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். இதில் திரைத் துறையைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலியை எடுத்துகொடுக்க இவர்களது திருமணத்தை தலைமை தாங்கினார்.
இந்நிலையில் இந்த புதுமண ஜோடி ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு இவர்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் சில முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. விஜய், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் இவர்களது திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த நான்கு நடிகர்கள் உடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
மேலும், அஜித்தை வைத்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக படமும் இயக்கயுள்ளார். ஆனால் இந்த பிரபலங்கள் திருமணத்திற்கு கலந்து கொள்ளாததன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை ஓடிடிக்கு விற்றதால் தான் இவர்கள் கலந்து கொள்ளவில்லையாம்.
திருமணத்தை ஒடிடியில் வெளியாகி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அவர்கள் பார்க்கின்றனர். அவர்கள் விளம்பரத்திற்கு நாங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று இதை தவிர்த்துள்ளனர். மேலும் இவர்களது திருமணத்தில் நிறைய கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தது. சொந்தக் காரில் வந்த பிரபலங்களை இறக்கி பேட்டரி காரில் ஏற்றி இவர்கள் திருமணம் நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் அங்கு மொபைல் போன்களும் பயன்படுத்தக் கூடாது. கூடுதலாக பவுன்சர்களைப் போட்டிருந்தார்கள். இதனால் இந்த திருமணத்தில் கலந்து கொண்டால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்பதால் விஜய், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் தவிர்த்துவிட்டனர்.