புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய்சேதுபதிக்கு தேசியவிருது கன்ஃபார்ம்.. புகழ்ந்து தள்ளிய முன்னணி இயக்குனர்

விஜய் சேதுபதி கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கோலிவுட் சினிமா பத்தாது என பாலிவுட்டிலும் 3, 4 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு மனுஷன் நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். இந்நிலையில் விக்ரம் படத்தில் இவருடைய கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டது.

தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியாகி உள்ள படம் மாமனிதன். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாமனிதன் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை பற்றி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அதில் மாமனிதன் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறது. இயக்குனர் சீனு ராமசாமியின் ஆன்மா இதயப்பூர்வமாக மிக அருமையான குடும்ப படத்தை இயக்கியுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தை ஒன்றி பயணிக்க வைக்கிறது.

மேலும் இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு அவருக்கு தேசிய விருது கொடுக்கலாம் அந்த அளவுக்கு யதார்த்தமாக நடித்துள்ளார் என ஷங்கர் பாராட்டியுள்ளார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தைப் பற்றி இவ்வாறு புகழ்ந்து உள்ளதால் பலரும் மாமனிதன் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஷங்கர் எனக்கு வில்லன் நடிகர் என்றால் முதல் சாய்ஸ் விஜய் சேதுபதி என்று கூறினார்.

தற்போது விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்தைப்பற்றி ஷங்கர் இவ்வாறு புகழ்ந்து உள்ளதால் ஷங்கரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதுவும் ஷங்கர் இயக்கத்தில் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தியன் 2 படம் விரைவில் தொடங்கவுள்ளது. இதனால் மீண்டும் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

Trending News