சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஜெயலலிதா தலைமையில் நடந்த கௌதமியின் முதல் திருமணம்.. வைரலாகும் புகைப்படம்

ரஜினி, பிரபு நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், பிரபு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கவுதமி நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மேலும் 80களில் கொடிகட்டிப் பறந்த ராதிகா, பானுப்பிரியா, ரேவதி, அமலா போன்ற நடிகைகளுக்கு இணையாக கௌதமியும் உயரத்தில் இருந்தார். மேலும் எக்கச்சக்க படவாய்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கௌதமியின் முதல் கணவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கௌதமி 1998 இல் சந்திப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்திற்கு உள்ளேயே 1999 இல் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். கௌதமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அதன் பிறகு 2005ஆம் ஆண்டிலிருந்து கமலஹாசனுடன் இணைந்து ஒன்றாக வாழ்ந்து வந்தார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக கமலஹாசனுடன் கௌதமி தொடர்பில் இருந்தார். மேலும் இவர்கள் இருவரும் கணவன், மனைவியாக பாபநாசம் படத்தில் நடித்திருந்தனர்.

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் சமீபத்தில் தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்காக கமலை விட்டு பிரிந்ததாக கௌதமி கூறியிருந்தார். அதன் பின்பு தனது மகள் சுப்புலட்சுமி உடன் கௌதமி தனியாக வாழ்த்து வருகிறார்.

Gautami first marriage photo

அது மட்டுமன்றி தனது மகளுக்கு நடிப்பு, நடனம் பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகிறார். மேலும் மிக விரைவில் கௌதமி போல அவரது மகளும் திரைத் துறையில் ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் கௌதமியின் முதல் திருமண புகைப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இடம்பெற்றிருந்தார்.

- Advertisement -

Trending News