புதன்கிழமை, ஜனவரி 8, 2025

வசூலில் முதல் 6 இடத்தை பிடித்த நடிகர்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய கமல்

சமீபகாலமாக உருவாகும் படங்கள் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகி வருகிறது. இதனால் எல்லா மொழிகளிலும் வசூல் வேட்டையாடி வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய நடிகர்களின் படங்கள் வெளியானதில் அதிக வசூல் செய்து முதல் ஆறு இடங்களில் பிடித்த நடிகர்களை பார்க்கலாம்.

பிரபாஸ் : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் இவரை உலக அளவில் வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. பிரபாஸின் திரை வாழ்க்கை பாகுபலி 2 படம் 1810 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது பிரபாஸ் ஒரு படத்திற்கு 120 கோடி சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

யாஷ் : கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வசூல் வேட்டை ஆடியது. அந்தவகையில் கேஜிஎப் 2 படம் 1230 கோடி வசூலை ஈட்டியது. இதனால் யாஷ் அதிகம் வசூல் செய்த நடிகர்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர். ராஜமௌலி இயக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படம் மிகப்பெரிய பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் 1100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

ரஜினிகாந்த் : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய படங்களுக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.O படம் கிட்டத்தட்ட 800 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

கமல்ஹாசன்  : உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் திரை உலகில் முக்கியமான நடிகராக உள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். இப்படம் தற்போது 400 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது.

விஜய் : தளபதி விஜய் படங்கள் வெளியானால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருப்பார்கள். இந்நிலையில் தற்போது விஜய் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படமாக தற்போது மாஸ்டர் படம் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் 368 கோடி வசூல் செய்தது.

Trending News