வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அனிருத்துக்கு நன்றி.. நாசுக்காக அசிங்கப்படுத்திய ஜேம்ஸ் வசந்தன்.!

அனிருத் பாடிய பாடலைக் கேட்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நக்கலடித்து கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். சுப்ரமணியபுரம், நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தற்போது யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற, கருத்தவெல்லாம் கலீஜா என்ற பாடலை அனிருத் பாடி இசை அமைத்திருப்பார்.இந்த பாடலை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை போட்டியாளர் சமீபத்தில் பாடியுள்ளார்.

அந்த பாடல் வரிகளில் தக்கலி என்ற வார்த்தை அவ்வப்போது வரும் நிலையில், அந்த வரியை மட்டும் அந்தப் பெண் குழந்தை அழுத்தமாக பாடி உள்ளார்.இந்த பாடல் காட்சியை பார்த்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இந்த பாடலை எழுதிய பாடலாசிரியருக்கும் இப்பாடலை பாடி இசையமைத்த இசையமைப்பாளருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார்.

அந்த பாடலில் இடம்பெற்ற தக்கலி  என்ற வார்த்தை கெட்ட வார்த்தை என்பது பல ஆண்களுக்கு தெரியும். அதனை அழுத்தமாக ரியாலிட்டி ஷோவில் அக்குழந்தை பாடும்போது பெற்றோரே ரசித்து பார்க்கின்றனர். இந்த நிலையில்,இது போன்ற இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தைகள் நிறைந்த பல பாடல்களை எழுதி, பதிவு செய்யுங்கள்.

அர்த்தம் தெரியாமல் குழந்தைகள், பெரியோர்கள் என பல நிகழ்ச்சிகளில் பாடி மகிழட்டும் என நக்கலாக அனிருத்தை சாடி ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ளார். சில பாடல்கள் ஹிட்டானாலும் அப்பாடலில் வரும் வரிகளை உணராமல், பலரும் அதனை மேடையேறி பாடி வருவது பலருக்கும் வெட்கத்தை அளிக்கும் வகையில் உள்ளதாக ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

எப்போதும் வெளிப்படையாக பேசி வரும் ஜேம்ஸ் வசந்தன், பல நாட்கள் கழித்து அனிருத்தை நக்கலாக விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News