தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியாகி உள்ள படம் மாமனிதன். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாமனிதன் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இவரின் கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது.
அதில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் விடுதலை திரைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி இப்பொழுது புது ட்ரெண்டை கையில் எடுத்து இருக்கிறார். நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கும் இவர், வருடத்திற்கு 12 படங்கள் ரிலீஸ் செய்து விடுவார்.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் இப்பொழுது வேறு விதமாய் யோசித்து வருகிறார். சமீபத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று விஜய் சேதுபதியை நாடி இருக்கிறது. அதாவது அவங்களுக்கு வெப்சீரிஸில் நடிக்குமாறு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதற்கு விஜய் சேதுபதி ஒரு பெரும் தொகையை கேட்டிருக்கிறார்.
அந்த தயாரிப்பு நிறுவனமும் அதற்கு ஒத்துக் கொண்டதாக தெரிகிறது. விஜய் சேதுபதி வெப்சீரிஸ் நடிப்பற்காக சுமார் 35 கோடிகள் சம்பளம் கேட்டிருக்கிறார். இதனால் அவர் இனிமேல் சினிமா பக்கம் சிறிது காலம் வருவது சந்தேகம்தான். கேட்பதைக் கொடுத்து, வேலையை சுலபமாகுவதால் பல கோடிகளை அள்ளிக் கொண்டு வெப் சீரியஸ் பக்கம் நடையை கட்டுகிறார் விஜய்சேதுபதி.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து கலக்கியிருக்கும் விக்ரம் திரைப்படம் சர்வதேச அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதில் பயங்கர வில்லத்தனத்துடன் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கும் விஜய் சேதுபதி மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கும் நிலையில் அடுத்தடுத்து இந்தியன் 2, தேவர் மகன் 2 போன்ற படங்களிலும் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கொண்டிருப்பதால் இனி ஹீரோவாக சாதிக்க முடியாது என்பதை மனதில் வைத்து விஜய் சேதுபதி இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம்.