திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

கார்த்திக்கு வில்லனாக நடிக்க முடியாது.. உச்சாணிக் கொம்பிற்கு சென்ற விஜய் சேதுபதி

கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படம் உருவாகியுள்ளது. ராஜு முருகன் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தின் வசனத்தை எழுதியிருந்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் கார்த்தியிடம் புதிய படத்தின் கதையை கூறியுள்ளார்.

கார்த்திக்கும் அந்தக் கதை பிடித்துப்போக இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். ராஜு முருகன், 2014 ஆம் ஆண்டு குக்கூ படத்தில் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி, அதன் பிறகு இவர் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை பெற்றது.

ராஜு முருகன் படங்கள் அனைத்துமே வசூலை விட அப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு பெரிய அளவில் பாராட்டு கிடைக்கும். ஒரு உண்மையான மனிதனுக்கு எப்போதுமே பாராட்டுதான் முக்கியம். அதனால் பெரும்பாலும் வித்தியாசமாக நடிக்க ஆசைப்படும் நடிகர்களே ராஜு முருகன் படங்களில்  நடிப்பார்கள்.

தோழா படத்திற்குப் பிறகு கார்த்தி மீண்டும் ராஜுமுருகனுடன் இணையும் புதிய படத்தில் கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க அவரை அணுகி உள்ளனர். ஆனால் விஜய் சேதுபதி அல்லு அர்ஜுன் படத்தில் வில்லனாகவும், ஷாருக்கானுக்கு ஜவான் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

அதனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். ஆனால் விஜய் சேதுபதிக்கு நெருக்கமானவர்கள் அல்லு அர்ஜுன், ஷாருக்கானை விட கார்த்தி பெரிய ஹீரோ இல்லாத காரணத்தால் தான் விஜய் சேதுபதி, ராஜு முருகன்- கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவில்லை என கூறிவருகின்றனர்.

ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு விஜய்சேதுபதி 30 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். அதைத் தர படக்குழு யோசித்ததால் அந்தப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். சினிமாவில் உச்சாணிக் கொம்பிற்கு சென்ற விஜய்சேதுபதி, தற்போதுவெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு 35 கோடி சம்பளம் தரும் பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வெப்சீரிஸில் நடிக்கவும் உள்ளார்.

Trending News