ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒருவர் ஜொலித்து மற்றொருவர் ஜொலிக்க முடியாமல் போன 5 சகோதரர்கள்.. தம்பிக்காக பட வாய்ப்பு கேட்ட ஆர்யா

சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே தன்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அதில் உள்ள பிரபலங்கள் அதிகமாக வாய்ப்பு கொடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்தாலும் மக்கள் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே அவர்களால் நிலைத்து நிற்க முடிகிறது. அவ்வாறு சினிமாவில் சகோதரர்களாக வந்து ஒருவர் மட்டுமே வெற்றி கண்ட ஐந்து பிரபலங்களை பார்க்கலாம்.

ஜீவா, ஜித்தன் ரமேஷ் : பிரபல தயாரிப்பாளரான ஆர்பி சௌத்ரியின் மகன்கள் தான் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா. ஜித்தன் ரமேஷ் நடிப்பில் முதலில் வெளியான ஜித்தன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. ஆனால் அவரது தம்பி ஜீவா தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சிலம்பரசன், குறளரசன் : இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி ராஜேந்தர். இவரது மூத்த வாரிசான சிம்புவும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அதிலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் இவருடைய தம்பி குறளரசன் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் இவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. கடைசியாக இது நம்ம ஆளு என்ற சிம்புவின் படத்தில் குறளரசன் இசை அமைத்திருந்தார்.

விஷால், விக்ரம் கிருஷ்ணா : பிரபல தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி அவர்களின் மகன்கள் விஷால் மற்றும் விக்ரம் கிருஷ்ணா. தற்போது விஷால் பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். விஷாலின் தம்பி விக்ரம் கிருஷ்ணா சில படங்களில் நடிகராகவும, தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

ஆர்யா, சத்யா : அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆர்யா தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதன் மூலம் தனது தம்பி சத்யாவையும் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார். காதல் டூ கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமான சத்யா புத்தகம், அமர காவியம் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவராலும் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை.

ஏஎல் விஜய், உதயா : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக கால் பதித்தவர் ஏ எல் விஜய். கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா என பல படங்களை கொடுத்துள்ளார். இவரது தம்பி உதயா இயக்குனர் பாரதி கண்ணனின் திருநெல்வேலி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் சரியாக போகாததால் தற்போது உதயா துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

Trending News