ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சிவராஜ் குமாருக்கு வாய்ப்பு கொடுக்க இதுதான் காரணம்.. ரஜினியை வம்பிழுக்கும் பயில்வான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்ற தகவல் அண்மையில் வெளியானது. தற்போது ரஜினி சிவராஜ் குமாருக்கு வாய்ப்பு கொடுக்க இதுதான் காரணம் என பயில்வான் சில விஷயங்களை கூறி உள்ளார்.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ஆரம்பத்தில் தமிழ் மொழி தெரியாத ரஜினி சினிமாவே வேண்டாம் என நினைத்ததும் உண்டு.

அதன்பிறகு தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் அடையாளமாக வந்து நிற்கிறார் சூப்பர் ஸ்டார். அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் மேடையில் பேசும்போது என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்கள் என தனது பேச்சை தொடங்குவார்.

இவ்வாறு எப்போதுமே தமிழ் மக்களை நினைவு கூர்ந்து நன்றி சொல்லக்கூடியவர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் சூப்பர் ஸ்டாரை பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது ரஜினி தமிழ்நாட்டில் இருந்தாலும் அவரது உறவினர் அனைவருமே கர்நாடகாவில் தான் உள்ளனர்.

மேலும் ரஜினி தமிழ்நாட்டில் சம்பாதித்துவிட்டு எல்லா சொத்துக்களையும் கர்நாடகாவில் தான் வாங்கியுள்ளார். இதனால் அந்த அரசுக்கு தான் வரியும் சேருகிறது. ஆகமொத்தம் ரஜினி மற்றும் அவரது குடும்பம், குழந்தைகள் மட்டும் தான் தமிழ்நாட்டில் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்திலும் கன்னட நடிகர் என்பதால் சிவராஜ் குமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் ரஜினி என பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

ஏனென்றால் கன்னட சூப்பர் ஸ்டாரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவரின் மகன் சிவராஜ்குமாரை தமிழ் சினிமாவில் ரஜினி அறிமுகப்படுத்த உள்ளார் என பயில்வான் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகளை விமர்சித்து வந்த பயில்வான் தற்போது சூப்பர்ஸ்டாரை வம்புக்கு இழுத்துள்ளார்.

- Advertisement -

Trending News