சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஆரம்பத்திலேயே சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு சிக்கலா.? சப்ப மேட்டருக்கு தகராறா

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றி படங்களை கொடுத்து உள்ளதால் தற்போது அவருக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அயலான் படத்தைத் தொடர்ந்து பிரின்ஸ் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார். இப்படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகிவருகிறது.

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி உள்ளாக்கியது. முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அந்த வீடியோவில் மாவீரன் என்ற டைட்டில் போடப்பட்டிருந்தது. இதனால் ரஜினி படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயன் சூடுகிறார் என்று இணையத்தில் கேலி செய்து வந்தனர்.

ஏனென்றால் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் டைட்டிலும் ரஜினியின் முந்தைய படத்தின் டைட்டில் தான். முதலில் தனுஷ் இதுபோன்ற ரஜினிகாந்த் படத்தின் டைட்டிலை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

இதனால் தற்போது சிவகார்த்திகேயனும் அதையே பின்பற்றி வருகிறார் என்ற பேச்சுகள் அடிபட்ட வந்தது. அதுமட்டுமல்லாமல் மாவீரன் வீடியோவில் ரஜினி பழைய படங்களில் உள்ள கெட்டப்பை போலவே சிவகார்த்திகேயனின் கெட்டப்பும் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

அதாவது 1986 ரஜினிகாந்த் நடிப்பில் மாவீரன் என்ற படம் வெளியானது. இது தவிர மகதீரா என்ற படத்தின் தமிழ் ஆக்கத்திற்கு மாவீரன் என்று வைத்துள்ளனர். இதனால் மூன்றாவது முறையாக மாவீரன் என்ற டைட்டில் சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆகையால் ஆரம்பத்திலேயே இந்தப் படத்துக்கு பெரும் சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் சிவகார்த்திகேயன் இந்த டைட்டிலை கையில் எடுக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு டைட்டிலை மாற்றினால் அதுவும் சர்ச்சையாக அமையும்.

- Advertisement -

Trending News