வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஹர்பஜன் சிங்கிடம் அடிவாங்கியும் திருந்தலயே.. இன்னுமா தம்பி நீங்க இந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க?

இந்திய அணிக்குள் வந்த புதிதில் ஸ்ரீசாந்த் அசத்தினார் என்பது மறுக்கப்படாத உண்மை. ஆரம்பத்தில் இவர் பந்துவீச்சை வைத்து ஆஸ்திரேலிய அணியவே ஒரு அரட்டு அரட்டிவிட்டார் என்று கூறலாம். 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வாங்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.

2005ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து வந்து இந்திய அணிக்குள் நுழைந்தார் ஸ்ரீசாந்த். ஆரம்பத்தில் மிக ஆக்ரோஷமான பந்து வீச்சாளராக இந்திய அணியில் வலம் வந்து கொண்டிருந்தார். சௌரவ் கங்குலியின் தலைமையின் கீழ் இவர் எல்லா போட்டிகளிலும் கலந்துகொண்டு இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்புகளை தேடி தந்தார்.

அதன்பின் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வந்தார்.அப்படி விளையாடும் போது இவர் ஒரு போட்டியில் தேவையில்லாமல் ஹர்பஜன் சிங்கிடம் வம்பிழுத்து, அவரிடம் கன்னத்தில் அரை வாங்கி மைதானத்திலேயே அழுது சர்சையை ஏற்படுத்தினார். அதன்பின் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை தொலைத்தார். பிசிசிஐ இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

அந்தத் தடையை எதிர்த்து போராடி மீண்டும் கேரளாவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஸ்ரீசாந்த் 2007ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய 20 ஓவர் இறுதிப் போட்டியில், ஒரு முக்கியமான கேட்ச்சை பிடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

இப்பொழுது இவர் பல காமெடியான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இவர் இந்திய அணியில் விளையாடி இருந்தால் இன்னும், மூன்று உலக கோப்பைகளை விராட் கோலி வென்றிருப்பார் என்று உளறிக் கொண்டிருக்கிறார்.

2015, 2019, 2021 இந்த மூன்று வருடமும் இந்திய அணி நான் விளையாடி இருந்தால் எளிதாக உலக கோப்பையை வென்று இருக்கும் என்று தன்னைத்தானே பெருமைப்படுத்தி பேசியிருக்கிறார். இதை நெட்டிசன்கள் 40 வயதில் உங்களுக்கு இந்த பேச்சுக்கள் தேவையா? ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் விளையாட்டு மேம்பட்டு வருகிறது, உங்கள் காலம் வேறு, இப்பொழுது நடைமுறையில் உள்ள காலம் வேறு, பேசாமல் இருங்கள் என்று கலாய்த்து வருகின்றனர்

- Advertisement -

Trending News