இந்திய சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட்டடித்த நடிகர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம். இதில் அதிக படங்கள் ஹிட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக மோகன்லால், மம்முட்டி, அமீர்கான், சிரஞ்சீவி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் எவ்வளவு படங்கள் ஹிட் கொடுத்துள்ளார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
ரஜினிகாந்த் : ஆசியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களுள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கிட்டத்தட்ட 15 இன்டஸ்ட்ரியல் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். முரட்டுக்காளை, படிக்காதவன், மனிதன், தளபதி, மன்னன், அண்ணாமலை, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கபாலி, 2.o ஆகிய படங்கள் இதில் அடங்கும். மேலும் தெலுங்கில் பேடா ராயுடு என்ற ஹிட் படத்தையும் ரஜினி கொடுத்துள்ளார்.
மம்முட்டி : மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் மம்முட்டி. இவர் 12 இன்டஸ்ட்ரியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சந்தர்ப்பம், யாத்திரா, ஆவனாழி, புதுடெல்லி, ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு, ஒரு வடக்கத்திய வீரம், அப்பூஸ், தி கிங், ஹிட்லர், ராஜமாணிக்கம், ட்வென்டி 20, கேரள வர்மா பழசிராஜா ஆகியவை ஆகும்.
மோகன்லால் : மலையாள சினிமாவில் மம்முட்டிக்கு இணையாக மற்றொரு நடிகர் மோகன்லால். இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருபதாம் நூற்றாண்டு, சித்திரம், கிளுக்கம், மணிசித்திரதாழு, நரசிம்மா, ட்வென்டி 20 ஆகிய படங்கள் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.
சிரஞ்சீவி : தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் பசிவாதி பிராணம், யமுதிகி மொகுடு, அடக்கு யமுது அம்மைகி மொகுடு, ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி, கேங் லீடர், ஜிஹரனா, இந்திரா ஆகிய ஆறு படங்கள் சிரஞ்சீவிக்கு இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது.
அமீர்கான் : பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அமீர்கான். இவருடைய கஜினி, இடியட்ஸ், தூம், பிகே, டங்கள் ஆகிய ஐந்து படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் அமீர்கான் பாலிவுட் சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார்.
கமலஹாசன் : உலகநாயகன் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், இந்தியா, விக்ரம் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இவ்வாறு கமல் 5 இன்டஸ்ட்ரி ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.