எப்ப வேணாலும் நடக்கலாம்.. தனுஷை ரெடியாக இருக்கச் சொன்ன வெற்றிமாறன்

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதற்காக அவர்கள் இருவரும் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் இவர்களின் கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட இந்த கூட்டணி தற்போது மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக இணைய இருக்கிறது. அதாவது வெற்றிமாறன், தனுஷை வைத்து வடசென்னை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த அந்த திரைப்படம் விமர்சனரீதியாக பலரின் பாராட்டை பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகும் என்று வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறதாம்.

ஏற்கனவே இரண்டாம் பாகத்துக்காக கிட்டத்தட்ட 50 நிமிடங்களுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு வெற்றிமாறன் சிறு இடைவெளி வேண்டும் என்பதற்காக அந்த படத்தை நிறுத்தி வைத்திருந்தார். தற்போது வெற்றிமாறன் விடுதலை, வாடிவாசல் ஆகிய திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார்.

இந்த பட வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அவர் வடசென்னை 2 திரைப்படத்தை உருவாக்க இருக்கிறாராம். இதற்காக தனுஷ் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த டீமும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் வெற்றிமாறன் எப்போது ஷூட்டிங் என்று கூறிவிட்டால் தனுஷ் உடனே வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரெடியாக இருக்கிறாராம்.

ஏனென்றால் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் அவ்வளவாக ரீச் ஆகவில்லை. அதனால் அவர் தற்போது வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை மட்டுமே நம்பி இருக்கிறார். இந்த நிலையில் வெற்றிமாறனுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது அவருக்கு நிச்சயம் வெற்றியை தேடி கொடுக்கும் என்பதால் அவர் வடசென்னை 2 படத்திற்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறாராம்.