தொலைக்காட்சி

ஐஸ்வர்யாவை கடுப்பேத்தும் தனுஷ்.. இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டும் வைரல் போட்டோ

By Arun · 25 ஜூலை 2022 · Updated 13 அக் 2024
aishwarya-dhanush

தனுஷ் தற்போது அனைத்து மொழி படங்களிலும் படு பிசியாக உள்ளார். தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் மற்றும் தெலுங்கில் வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது தனுஷ் நடிப்பில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் புரமோஷன் வேலைக்காக தனுஷ் மும்பையில் தங்கியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பார்ட்டிக்கு வருகை தந்த தனுஷ் ஒரு இளம் நடிகையுடன் கைகோர்த்து வந்தது தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனமொத்து பிரிய போவதாக அறிவித்திருந்தனர். இதற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. ஆனால் தனுஷ் ஒரு இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டி வருவதால் ஐஸ்வர்யா இந்த முடிவு எடுத்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்ட வந்தது.

ஆனால் இதுகுறித்து உறுதிபட தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது தி கிரே மேன் படத்திற்கான பார்ட்டியில் பாலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் இளம் நடிகையான சாரா அலி கானும் கலந்து கொண்டார். பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலி கானின் மகள் ஆவார்.

மேலும் இந்த பார்ட்டிக்கு வரும் போது தனுஷ் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட தான் சாரா வந்திருந்தார். மேலும் ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கும்போது கூட தனுஷின் கையை சாரா விடவில்லை. இதனால் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்திற்கு சாரா தான் காரணமாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Dhanush-sara-ali-khan

மேலும் ஐஸ்வர்யாவை கடுப்பேத்துவதற்காக தனுஷூம் சாராவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தனுஷ் சாராவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.