சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

மகளை வைத்து அப்பாக்கள் போராடி ஜெயித்த 5 படங்கள்.. ஆறு தேசிய விருதை குவித்த ஒரே படம்!

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் மகளுக்காக அப்பாக்கள் போராடிய இந்த 5 சென்டிமென்ட் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. அதிலும் குறிப்பாக மணிரத்னம் இயக்கிய ஒரு படம் 6 தேசிய விருதை குவித்திருக்கிறது.

தெய்வ திருமகள்: விஜய் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் மனவளர்ச்சி குன்றியவரான விக்ரமின் மனைவி குழந்தை பிறந்த பிறகு இறந்து போக, விக்ரம் அந்த குழந்தையை கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் மனைவியின் குடும்பத்தினர் அவரிடமிருந்து குழந்தையை பிரித்ததால் நீதிமன்றத்தின் மூலம் குழந்தையைப் பெறுவதற்காக போராடுவார்.

இந்தப்படத்தில் மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் அழகான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் நீதிமன்றத்தில் இருவரும் செய்கையினால் பேசிக்கொள்வது இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களை கண் கலங்க வைத்திருக்கும்.

கடைசியில் விக்ரம்,  அந்த குழந்தை தன்னுடன் இருப்பதை விட மனைவியின் குடும்பத்தினரிடம் இருப்பதுதான் சரி. அதுதான் அந்த குழந்தையின் வாழ்க்கைக்கு நல்லது என்பதை உணர்ந்து தந்தையின் பாசத்தை அடக்கிக் கொண்டு குழந்தையின் முன்னேற்றத்திற்காக விட்டுக்கொடுத்து சென்றுவிடுவார்.

மகாநதி: 1994 ஆம் ஆண்டு சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கமலஹாசன் சிறையில் இருந்து விடுபட்டு வந்த பிறகு மகன் பரணி மற்றும் மகள் காவிரி இருவரையும் பார்க்க விரைவார். பல இடங்களில் தேடி ஒருவழியாக மகனை கண்டுபிடித்து விடும் கமலஹாசன் மகளே தேடி அலைந்து திரிவார்.

அதன்பின் தனது மகள் கல்கத்தாவில் ஒரு சிகப்பு விளக்கு பகுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்று தனது மகனை மீட்பதற்காக அவர் படும்பாடு இந்தப் படத்தைப் பார்ப்போர் அனைவரையும் மனம் கலங்க வைத்திருக்கும். எந்தத் தகப்பனுக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என கண்ணீர் வரழைத்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் , சிறந்த ஒலி அமைப்பிற்கான மற்றொரு தேசிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தங்க மீன்கள்: இயக்குனர் ராம் தந்தையாகவும் சாதனா மகளாக ஒன்றித்து நடித்து, தந்தை-மகளுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பை இயல்பாக வெளிப்படுத்திய இந்தப் படத்திற்கு மத்திய அரரசின் 3 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஒரு மகள் எதைக் கேட்டாலும் அதை செய்துவிட வேண்டும் என தந்தை படும் பாடு என்னவென்று என்பதை இந்தப் படம் காண்பித்து பலரை உருக வைத்திருக்கும்.

அச்சமுண்டு அச்சமுண்டு: அருண் வித்தியானந்தன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் பிரசன்னா, சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப் படம் முழுவதும் அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்டு அமெரிக்கவாழ் இந்தியர்களின் படமாக எடுக்கப்பட்டிருக்கும். இதில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகம் நடைபெறுகின்றன என வெளிப்படையாக சொல்லியிருப்பார்கள்.

இந்தப் படத்தில் பிரசன்னா தனது பெண் குழந்தைக்கு ஏற்பட்ட பாலியல் கொடூரங்களை அடையாளப்படுத்தி அறைகூவல் விடுத்திருப்பார். இந்தப் படம் ஒளிவுமறைவு இல்லாமல் பெண் குழந்தையை வைத்திருப்பவர்கள் பலரும் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கும்.

கன்னத்தில் முத்தமிட்டால்: 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இலங்கை இனப்பிரச்சனையை கதைக் கருவாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் எடுத்திருந்தாலும் இதில் சினேகா மற்றும் அவர் தத்து எடுத்து வளர்த்த மகளுக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பை அழகாக காண்பித்திருப்பார்கள்.

ராமேஸ்வரத்திற்கு அகதியாக வந்த இளம்பெண் ஒருவரின் பெண் குழந்தையை அனாதை இல்லத்தில் இருந்து தத்தெடுத்து வளர்க்கும் மாதவன்-சிம்ரன் தம்பதி, அவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு பிறந்த 2 மகன்களை விட அந்தப் பெண் குழந்தையை பாசமாக வளர்ப்பார்கள்.

ஒரு கட்டத்தில் அவளுக்கு தன் பிறப்பு தாயை காண பேராவல் கொள்வதால், அவள் பெற்றோர் அவளை இலங்கைக்கு அழைத்து செல்கின்றனர். பெரு முயற்சிக்குப் பின் அவள் தாய் விடுதலைப்புலி போராளி என அறிந்து அவளை சந்திக்கின்றனர். பிறகு பெற்ற தாயை இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அழைத்து வர அந்தக் குழந்தை முயற்சித்தாலும் தாய் மறுத்துவிடுகிறார்.

மாதவன் வளர்ப்பு மகளுக்காக உயிரை பணையம் வைத்து இலங்கைக்கு அழைத்து சென்று அவளுடைய ஆசையை நிறைவேற்றிய தந்தையாக போராடிய போராட்டம் பலரை கண் கலங்க வைத்திருக்கும் . இந்த படத்திற்கு 6 தேசிய விருதும்  3 ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை விருதுகளை வாங்கி குவித்தது மட்டுமல்லாமல் இந்த படத்தின் மூலம் மணிரத்னம் பலரை கலங்கடித்து இருப்பார்.

- Advertisement -spot_img

Trending News