சில காலங்கள் அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வந்த கமல்ஹாசன் தற்போது விக்ரம் திரைப்படத்தின் மூலம் முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பல கோடி வசூல் சாதனை புரிந்தது.
உலக மக்களின் கவனத்தை ஈர்த்த விக்ரம் திரைப்படத்தை பார்த்து கோலிவுட் வட்டாரமே அதிர்ந்தது. அந்த அளவுக்கு கமல்ஹாசனின் ரீ என்ட்ரி பல நடிகர்களுக்கும் சிறு அச்சத்தை கொடுத்தது. அந்த வகையில் இவர் தற்போது இளம் ஹீரோக்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் வகையில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மக்களிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை நன்றாக புரிந்து கொண்ட கமல் அடுத்தடுத்து நான்கு திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதில் ஏற்கனவே அவர் நடிப்பில் பாதியிலேயே நின்று போன இந்தியன் 2 திரைப்படம் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
அதைத் தொடர்ந்து கமல், ஹெச் வினோத் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு கதையில் நடிக்க இருக்கிறார். அந்த ஸ்கிரிப்டை கமலிடம் கூறி ஓகே செய்திருக்கும் வினோத், அஜித் படத்தை முடித்துவிட்டு உலக நாயகனை இயக்க இருக்கிறார்.
மேலும் பா ரஞ்சித், கமலுக்காக ஒரு சூப்பரான கிராமத்து கதையை எழுதி இருக்கிறாராம். மதுரையை சுற்றி நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் அந்த கதையில் ஆண்டவர் ஒரு பக்கா கிராமத்தானாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து கமல் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்திலும் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் விரைவில் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போகிறார். அந்த திரைப்படத்தை முடித்துவிட்டு அவர் மீண்டும் கமலுடன் இணையாய் இருக்கிறார்.
அந்த வகையில் ஆண்டவர் தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் பிசியான நடிகராக மாறி இருக்கிறார். இந்த நான்கு படங்களிலும் அவர் தேர்ந்தெடுத்து இருக்கும் கதைகளமும் வித்தியாசமாக இருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இனி ஆண்டவரின் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது.