சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஹீரோவா தோத்தாலும் வில்லனா ஜெயிச்சுட்டேன்! வசூலை வாரிக்குவித்த விஜய் சேதுபதியின் 3 மாஸ் படங்கள்

ஒரே சமயத்தில் பல மொழிகளில் என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடலெடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி, ஹீரோவாக நடித்ததை விட வில்லனாக நடித்த பிறகுதான் அவருடைய மார்க்கெட் எகிறி உள்ளது.

மாஸ்டர்: இவர் சுந்தரபாண்டியன், விக்ரம்வேதா போன்ற படங்களில் சிறிய அளவில் வில்லன் ரோலில் நடித்திருந்தாலும் தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்த பவானி கேரக்டர்தான் விஜய் சேதுபதியை மாஸ் வில்லனாக காண்பித்தது. என்னதான் விஜய் இந்த படத்தில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து 300 கோடி வசூலை வாரிக் குவித்தது.

பேட்ட : இதை போன்று இந்தப் படத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி அந்தப் படத்தின் வசூல் 200 கோடி ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

விக்ரம்: இது மட்டுமின்றி சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்குப் பின்பு திரையில் தோன்றிய விக்ரம் படத்தில் வயதான வில்லன் ரோலில் மிரட்டியிருப்பார். உலக அளவில் 450 கோடி வசூல் வேட்டை ஆடிய விக்ரம் படத்திற்கு விஜய் சேதுபதியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

மேலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும், அவர் வில்லனாக நடித்த இந்த மூன்று படங்களும் 200 கோடிக்கு குறைவில்லாமல் வசூல் சாதனை புரிந்த படங்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கிறது.

இதனால் தற்போது விஜய் சேதுபதி ஹீரோவாக கமிட்டாகுவதை விட வில்லனாக பல மொழிகளில் பெரிய பெரிய ஹீரோக்களுக்கு நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளார். அட்லி இயக்கும் ஷாருக்கானின் ஜவான், அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, தமிழில் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான், இந்தியன் 2, தேவர் மகன் 2 என அடுத்தடுத்த படங்களில் வில்லனாக மிரட்டப் போகும்,

இதுமட்டுமின்றி விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67-வது படத்திலும் விஜய்க்கு இரண்டாவது முறையாக வில்லனாக நடிக்க போகிறார். இதெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இனிமேல் ஹீரோவாக விஜய்சேதுபதியை பார்க்க வாய்ப்பில்லை என்பது தெரிகிறது.

- Advertisement -

Trending News