திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தொடக்கூட முடியாத உயரத்திற்கு எகிறிய கமலின் மார்க்கெட்.. ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளி சாதனை

கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத அளவுக்கு மாபெரும் வெற்றியை பெற்றது. கமலே எதிர்பார்க்காத அளவுக்கு கிடைத்த இந்த வெற்றி அவருடைய மார்க்கத்தையும் தாறுமாறாக எகிற வைத்துள்ளது.

இதன் மூலம் அவர் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் தன்னுடைய சம்பளத்தையும் எக்கச்சக்கமாக உயர்த்தி இருக்கிறார். அதாவது விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு அவர் அடுத்ததாக நடித்த இருக்கும் படத்திற்கு 150 கோடி வரை சம்பளமாக நிர்ணயித்து உள்ளாராம்.

இதுவரை தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ரஜினி மற்றும் விஜய் இருவரும் தான் இருக்கின்றனர். அதில் ரஜினி அண்ணாத்த படத்திற்காக கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அவர் நடிக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்காக சன் பிக்சர்ஸ் அண்ணாத்த படத்திற்கு கொடுத்ததை விட அதிக சம்பளம் பேசியிருக்கிறார்களாம்.

அவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திற்காக 130 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருக்கிறாராம்.

ஆனால் கமல்ஹாசன் இப்போது சம்பள விஷயத்தில் இவர்கள் இருவரையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் கோலிவுட் வட்டாரமே இவரை ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்கிறது. பொதுவாக கமலின் திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல விமர்சனங்கள் இருக்கும். ஆனால் லாபம் என்பது கணிசமாகத்தான் இருந்து வந்தது.

அவருடைய படம் எல்லாம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டுமா என்பது கேள்விக்குறியாக இருந்த பட்சத்தில் தற்போது விக்ரம் திரைப்படம் அதை எல்லாம் தகர்த்தெறிந்துள்ளது. இதன் மூலம் கமல் தன்னுடைய மார்க்கெட்டை வேற லெவலில் உயர்த்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Trending News