தமிழ் சினிமாவில் இரு பெரும் சிகரங்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கமலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவர் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
அதேபோன்று சூப்பர் ஸ்டாரும் அடுத்ததாக ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கும் இவர்கள் இருவரும் நீண்ட காலமாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். பொதுவாக சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருப்பவர்களுக்கு தொழில் சம்பந்தமாக பல போட்டிகள் இருக்கும்.
ஆனால் கமல், ரஜினி இருவரும் அதிலிருந்து சற்று மாறுபட்டவர்கள். பல வருடங்களாக தொழில் போட்டி இருந்தாலும் இவர்கள் இருவருக்குமான நட்பு இன்றும் குறையாமல் இருந்து வருகிறது. இப்படி ஒற்றுமையாக இருக்கும் இவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் இரு வேறு துருவங்களாக இருக்கின்றனர்.
அதாவது இவர்கள் இருவரும் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் பணத்தைப் பொருத்த வரையில் இருவருக்குமான கொள்கைகள் வெவ்வேறாக இருக்கிறது. அந்த வகையில் கமல் பணத்தை வீட்டில் வைத்திருப்பதை முட்டாள்தனம் என்று நினைப்பவர்.
அதனால் அவர் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து வருகிறார். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கை உடையவர். தற்போது கூட இவர் விக்ரம் திரைப்படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை அடுத்தடுத்த படங்களை தயாரிப்பதன் மூலம் முதலீடு செய்ய இருக்கிறார்.
ஆனால் ரஜினிகாந்த் அதற்கு சற்று நேர்மாறாக சிந்திக்க கூடியவர். எப்படி என்றால் பணம் நிம்மதியை கெடுத்து விடும். அதிக பணம் சம்பாதித்தால் மன நிம்மதி போய்விடும் என்பது தான் சூப்பர் ஸ்டாரின் கொள்கை. என்னதான் ஆடம்பரமாக அவர் இருப்பது போல் தோன்றினாலும் பல விஷயங்களில் அவர் இன்று வரை அந்த எளிமையை தான் கடைப்பிடித்து வருகிறார்.