சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

4 ஹிட் படங்களின் வில்லன் கதாபாத்திரத்தை மிஸ் செய்த அர்ஜுன்.. இப்ப தேம்பித் தேம்பி அழுது என்ன பிரயோஜனம்

அர்ஜுன் 90 களின் தொடக்கத்தில் கதாநாயகனாக வலம் வந்தாலும் அவரது இரண்டாவது இன்னிங்சில் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என நடித்து வருகிறார். சில வெற்றி பெற்றாலும் பல எடுபடாமல் போனது. ஆனால் அர்ஜுன் தவறவிட்ட இந்த 4 படங்களை மட்டும் அவர் நடித்திருந்தால் இப்போது மிகப்பெரிய வில்லனாக கோலிவுடை கலக்கி இருப்பார். ஜீவா முதல் விஜய் படம் வரை அர்ஜுன் மிஸ் செய்த படங்களின் வரிசை மற்றும் காரணங்கள்.

கோ: ஜீவா, அஜ்மல், கார்த்திகா நாயர், பிரகாஷ்ராஜ் நடித்த படம். அரசியல் தவறுகளை தைரியமாக தட்டி கேட்கும் பத்திரிக்கையாளராக ஜீவா, அரசியல் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் வில்லன் வாய்ப்பு முதலில் அர்ஜுனுக்கே சென்று இருக்கிறது ஆனால் அப்போது அர்ஜுன் வேறொரு படத்தில் நடித்து கொண்டிருந்ததால் அவரால் இந்த படத்தில் கமிட் ஆக முடியாமல் போனது.

இந்தியன்: இந்தியன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜுனை ஷங்கர் கேட்ட போது அர்ஜுன் அதை மறுத்து விட்டார். ஏற்கனவே ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன் ஊழலை எதிர்க்கும் கதாபாத்திரம் ஏற்று நடித்ததால், இந்தியன் படத்தில் ஊழல்வாதியாக நடிக்க அவர் விரும்பவில்லை.

மாநாடு: சிம்புக்கு வில்லனாகும் வாய்ப்பை அர்ஜுன் மாநாடு திரைப்படத்தின் கதை பிடிக்கவில்லை என்று நிராகரித்து விட்டார். நாயகனும் வில்லனும் டைம் லூப்பில் மாட்டிக்கொள்வது போல் எடுக்கப்பட்ட திரைப்படம். வந்த காட்சிகளே மீண்டும் மீண்டும் வந்ததால் ரசிகர்களின் ஒரு சாராருக்கு கூட இந்த படம் அந்த அளவுக்கு திருப்தியை அளிக்கவில்லை. அர்ஜுன் இதற்கு முன்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர்: இந்த திரைப்படத்தில் பவானி கேரக்டரை வில்லன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது ‘எதிர்நாயகன் ‘ என சொல்லலாம், அந்த அளவிற்கு வெயிட்டான கதாபாத்திரம். இந்த வாய்ப்பு முதலில் ஆக்சன் கிங்கிடம் தான் சென்று இருக்கிறது ஆனால் சீனியர் நடிகரான அவர் கடைசி காட்சியில் விஜயிடம் அடிவாங்கும் காட்சியில் நடித்தால் அவரது இமேஜ்க்கு சரி ஆகாது என மறுத்துவிட்டார்.

அர்ஜுன் மட்டுமல்ல இப்போது கோலிவுட்டில் மிக முக்கிய இடங்களில் இருக்கும் பல நடிகர்கள் தங்களுக்கு வந்த நிறைய நல்ல படங்களை ஏதோ ஒரு காரணத்திற்க்காக மறுத்து இருக்கிறார்கள் பிந்நாளில் அந்த படங்கள் வெற்றியும் அடைந்து இருக்கிறது.

Trending News