ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கோடிகளை வாரி குவித்த விருமன் படத்தின் முதல் நாள் வசூல்.. தம்பியை வச்சு கல்லா கட்டிய அண்ணன்

கார்த்தி நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் பருத்திவீரன் கெட்டப்பில் நடித்திருக்கும் விருமன் படம் நேற்று வெளியாகி இருந்தது. முத்தையா இயக்கத்தில் அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சூரி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மதுரையே வியந்த பார்க்கும் அளவிற்கு இப்படத்தின் புரமோஷன் தடபுடலாக நடந்தது. அதுமட்டுமன்றி இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து இருந்தது. விருமன் படத்தை தம்பிக்காக அண்ணன் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார்.

இந்நிலையில் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் படத்தின் வசூல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விருமன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 8.2 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கார்த்தியின் திரைவாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை விருமன் படம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் 5 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் அதை தற்போது இப்படம் முறியடித்துள்ளது.

மேலும் இந்த வாரம் அதிக விடுமுறை நாட்கள் உள்ளதால் விருமன் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விருமன் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் ட்ரைலரை வைத்தே இந்த வாரம் கல்லாவை நிரப்பிவிடுவார்கள்.

அதிலும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் படத்திற்கு வேற லெவலில் ப்ரோமோஷன் செய்திருந்தார். முதல் படத்திலேயே பாட்டு, நடனம் என அனைத்திலும் பூந்து விளையாடி இருந்தார். மேலும் தம்பி கார்த்தியை வைத்து இனி வரும் நாட்களிலும் முடிந்த அளவு லாபத்தை பார்க்க உள்ளார் சூர்யா.

- Advertisement -

Trending News