புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விடுதலைப் போராட்டத்தை கண்முன் நிறுத்தி வெற்றி கண்ட 6 படங்கள்.. லஞ்சத்தை களை பிடுங்கிய இந்தியன்

விடுதலை போராட்டத்தை புத்தகத்தில் படித்த நமக்கு, அந்த போராட்டங்களையும், நம் மண்ணின் வீரத்தினையும் கண் முன் காட்டியது தமிழ் சினிமா. விடுதலை போராட்டத்தை பேசிய 6 திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

தியாக பூமி – 1939: மஹாதேவன்-சுப்பு லட்சுமி நடிப்பில் வெளியானது தியாக பூமி திரைப்படம். இந்த படத்தில் காந்தியின் சுதந்திர போராட்ட நடவடிக்கைகள் பற்றி தெளிவாக கூறி இருக்கிறார்கள் .

வீரபாண்டிய கட்டபொம்மன் – 1959: ‘கிஸ்தி, திரை, வரி, வட்டி’ என்ற வசனம் மூலம் கட்ட பொம்மனை நமக்கு கண்ணில் காட்டியது 1959 ஆம் ஆண்டு வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன். P R பந்துலு இயக்கிய இந்த படத்தில் சிவாஜி, ஜெமினி, பத்மினி நடித்திருப்பார்கள். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தமிழ் மன்னர்களில் ஒருவரான கட்டபொம்மனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் – 1961: சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் வாழ்க்கையை கதையாக எடுக்கப்பட்ட படம். P R பந்துலு இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் முழுக்க பாரதியாரின் பாடல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. வரி விலக்கு அளிக்கப்பட முதல் திரைப்படம் ஆகும்.

சிவகெங்கைச் சீமை – 1959: கவிஞர் கண்ணதாசன் திரைக்கதை, வசனத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1959 ஆண்டு வெளியான திரைப்படம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். எஸ். எஸ். ராஜேந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிறைச்சாலை – 1996: சுதந்திர போராட்ட வீரத்தையும், போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்ட பின் சிறையில் அனுபவிக்கும் துயரத்தையும் சொன்ன இந்த படம் 1996 ஆம் ஆண்டு ப்ரியதர்ஷன் இயக்கத்தில், மோஹன்லால், பிரபு, தபு நடிப்பில் வெளியானது. சுதந்திர போராட்ட வீரர்களாக சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளாக மோஹன்லால், பிரபு நடித்திருந்தனர்.

இந்தியன்: 1996 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல், சுகன்யா, மனீஷா கொய்ராலா , கவுண்டமணி, செந்தில் நடித்த படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடக்கும் ஊழலை கண்டு ஆதங்கப்படுவது போல் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். இதில் தியாகி சேனாதிபதியாகவும், அவருடைய மகன் சந்துருவாகவும் கமல் ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்த படம் 1995 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா படத்தின் வசூலை முறியடித்தது.

Trending News