வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

எம்ஜிஆர், ஜெயலலிதா போல வாழ ஆசைப்படும் திரிஷா.. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல!

இந்திய சினிமாவில் நடிகர்கள் நடிகைகள் அரசியலுக்கு வருவது மிக சாதாரண ஒரு விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் மக்களும் அதற்கு தகுந்தார்போல் சினிமாவில் நடிப்பவர்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வாக்கினையும் பதிவு செய்வார்கள். அந்த வகையில் தமிழக அரசியல் நடிகர்களை நம்பி மட்டுமே இன்றுவரை பல முதலமைச்சர்கள் பெற்றுள்ளது.

நடிகர்களுக்கு சரிசமமாக நடிகைகளும் அரசியலுக்கு இப்போது அதிகம் வரத் தொடங்கியுள்ளனர். நிறைய நடிகைகள் தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதன் முக்கியமாக கருதப்படுபவர் அன்று முதல் இன்று வரை செல்வி ஜெயலலிதா அவர்கள் மட்டுமே. அவர்கள் சாதித்ததை போல் மற்ற நடிகைகளும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் அரசியலுக்கு வருகிறார்கள்.

அந்த வரிசையில் முக்கியமாக குஷ்பூ அவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். திமுகவில் இணைந்தார் பின்னர் காங்கிரஸில் இணைந்தார் இப்பொழுது பிஜேபி யில் இருந்து வருகிறார். இவருக்கு நடிக்கும் பொழுது கோயில் கட்டிய ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வந்த பிறகு பார்த்து சிரித்தார்கள். இவரது பேச்சு அரசியல் பார்வையும் மக்களுக்கு நகைச்சுவையாக தோன்றியது.

இதனால் இவர் இன்று கவுன்சிலராக கூட ஒரு பதவி வாங்க முடியாமல் பெயருக்காக கட்சி கொடுக்கும் பதவியை வைத்துக் கொண்டு சுற்றி வருகிறார். இந்த ஆசை இப்பொழுது திரிஷா அவர்களுக்கு வந்துள்ளது. இவர் அரசியலுக்கு வர போகிறாராம் அதுவும் குஷ்புவை போல காங்கிரஸில் இணையபோகிறார்.

ஆனால் இவரது நோக்கம் வேறு அதாவது அரசியலை கற்றுக்கொண்டு இவருக்கு மக்கள் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று பார்த்து பின் தன் ஆஸ்தான கதாநாயகன் விஜய் ஆரம்பிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பினை வாங்கப் போகிறாராம். இதுவும் விஜய் சொல்லியே இவர் அரசியலுக்கு வருகிறார் என்று சில கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

எடுத்துக்காட்டாக எம்ஜிஆர் பக்கத்தில் ஜெயலலிதா எப்படி இருந்தாரோ அந்த அளவிற்கு இவரை வளர்க்க ஆசைப்படுகிறார் விஜய். இவருக்கும் அரசியல் ஆசை இருப்பதால் இதனை இப்போது காங்கிரஸ் கட்சியின் மூலம் தொடங்குகிறார் திரிஷா. இவர்கள் ஒரு கணக்குப் போட்டாலும் மக்கள் ஒரு கணக்கு போடுவார்கள் அதன் அடிப்படையிலேயே இவர்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News