சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய்-யின் மீது அக்கறை காட்டாத சீமான்.. அடுத்த தூண்டில் யாருக்கு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பின்னால் தான் இந்த தமிழகம் என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். ஆகையால் மக்கள் அனைவரும் நடிகர்கள் செய்வதை செய்வது அவர்கள் சொல்வதை கேட்பது என்ற அளவிற்கு இன்றும் தமிழ்நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகையால் அரசியல் கட்சித் தலைவர்களும் நடிகர்களின் ஆதரவை பெறுவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

ரஜினியின் ஆதரவைத் தேடி பல கட்சிகள் இன்று வரை பின்னால் சென்று கொண்டிருக்கிறது. அடுத்து கமல் தானாக கட்சி தொடங்கியதால் அவரை யாரும் தொந்தரவு செய்யவில்லை. அடுத்து அஜித் அவர்கள் அரசியல் பிடிக்கவில்லை என்று ஒதுங்கி விட்டார். அரசியலுக்கு தகுந்த நபர் அடுத்து விஜய் மட்டுமே.

எப்பொழுது தமிழ்நாட்டில் நியாயங்களை பேசுவதில் சீமான் சிறந்தவர். தவறு யார் செய்தாலும் இந்த கட்சியினர் செய்தாலும் எந்த நடிகர்கள் செய்தாலும் பாரபட்சமற்ற முறையில் பேசிய கொன்றுவிடுவார். ஆனால் இவர் விஜய் மீது நான் மிகுந்த மரியாதை உள்ளவர் தம்பி விஜய் என்று செல்லமாக அழைப்பார். விஜயை வைத்து பகலவன் என்ற திரைப்படத்தை கூட தொடங்கினார் ஆனால் அது பேச்சுவார்த்தை யோடு இருந்துகொண்டிருக்கிறது.

விஜய்யும் தனது பங்கிற்கு முக்கிய தலைவர்களையும் பல மாநில முதல்வர்களை சந்திப்பது அரசியல் ரீதியாக மக்களுக்கு சில உதவிகளையும் செய்து தனது ரசிகர் மன்றங்களில் ரசிகர்களை சுறுசுறுப்புடன் இயக்கிக் கொண்டிருக்கிறார். எதற்காக என்றால் அடுத்த தேர்தலில் விஜய் ஈடுபடுவார் என்ற பேச்சு அதிகமாக காணப்படுகிறது.

சீமானுடன், விஜய்யும் இணைந்து செயல்படுவார்கள் என்று நினைத்து நிலையில் விஜய் தனியாக செயல்படுவதால். இப்போது சீமான் அவர்கள் தம்பி விஜய்யை பற்றி அதிகம் பேசுவதில்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு பத்திரிக்கையாளர் விஜய்யை வைத்து படம் எப்போது எடுப்பீர்கள் என்று கேட்டதற்கு. இனிமேல் அது நடக்காது அதற்கான சூழ்நிலை இனிமேல் அமையாது.

அதனால் தம்பி சிம்புவை வைத்து அந்த படத்தை நான் இயக்குவேன். என்று இப்போது தம்பி விஜய் தாண்டி சிம்புவிடம் சென்றுவிட்டார் சீமான். இதுவே ஒரு அரசியல் ரீதியான நகர்வாக கருதப்படுகிறது. இன்னும் போகப்போக என்னலாம் நடக்கப்போகிறது. இதையெல்லாம் தமிழக மக்கள் அதை எல்லாம் உன்னிப்பாக கவனித்து அனைவரையும் அரசியல் மேடையில் ஏற்றுவார்கள். தூக்கியும் எறிவார்கள்.

- Advertisement -

Trending News