புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஹீரோயின்கள் நடிக்க முடியாது என ஒதுக்கிய 6 ஹீரோக்கள்.. ஆனா இப்ப அவங்க ரேஞ்சே வேற!

இப்போது இருக்கும் முன்னணி நடிகைகள் பலரும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, இல்லையோ ஹீரோவுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் ஹீரோ யார் என்று கேட்ட பிறகு தான் கதை கேட்கவே ஆரம்பிக்கின்றனர்.

முன்னணி ஹீரோவாக இருந்தால் சம்பள விஷயத்தில் கூட அவர்கள் இறங்கி வந்து விடுவார்கள். அதுவே வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்தால் நடிப்பதற்கு கொஞ்சம் யோசிப்பார்கள். அப்படி ஹீரோயின்கள் நடிக்க முடியாது என்று ஒதுக்கிய ஆறு நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

சிவகார்த்திகேயன்: இவர் விஜய் டிவியின் காமெடி ஷோவில் கலந்துகொண்டு அதன் மூலம் தொகுப்பாளராக மாறி இன்று முன்னணி நடிகர் அந்தஸ்த்தில் இருக்கிறார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவரை ஒரு காமெடியனாக தான் பலரும் பார்த்தார்கள்.

அதனால் இவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் மறுத்தனர். ஆனால் இப்போது இவருடைய ரேஞ்சே வேற. நயன்தாரா, சமந்தா போன்ற டாப் ஹீரோயின்களுடன் இணைந்து நடித்திருக்கும் இவருடன் நடிப்பதற்கு தற்போது பல இளம் நாயகிகளும் போட்டி போட்டு வருகின்றனர்.

Also read: கரெக்டான ரூட்டை பிடித்து மார்க்கெட்டை தக்க வைத்த 5 நடிகர்கள்.. நமக்கு என்ன வருமோ அதைத்தான் செய்யணும்

விமல்: கிராமத்து கதைகளுக்கு ஏற்ற முகமாக இருக்கும் இவர் களவாணி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகள் யாரும் இவருக்கு ஜோடியாக நடிக்க முன்வரவில்லை. தற்போது சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விமல் அதற்கு ஏற்றவாறு கதாநாயகிகளுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

ஆர் ஜே பாலாஜி: காமெடியனாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் இவருடன் இணைந்து நடிக்க எந்த நடிகையும் முன் வரவில்லை. இவருடைய படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகமாக இருக்கும் காரணத்தால் தற்போது சில ஹீரோயின்கள் இவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்து வருகின்றனர்.

Also read:தமிழ் படங்களை ஒதுக்கி அக்கட தேசத்திற்கு பறந்த 5 இயக்குனர்கள்.. பாலிவுட் வரை பட்டையை கிளப்பும் அட்லி

தனுஷ்: கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று பிரபலமாக இருக்கும் தனுஷ் ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களை சந்தித்தார். அதில் முக்கியமானது பிரபல ஹீரோயின்கள் பலரும் இவரெல்லாம் ஹீரோவா என்று உதாசீனப்படுத்தினர்.

ஆனாலும் மனம் தளராத தனுஷ் தன்னுடைய விடாமுயற்சியின் காரணமாக இன்று ஒரு முன்னணி ஹீரோவாக மாறி இருக்கிறார். அந்த வகையில் இப்போது இவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்களும் ஏங்கி வருகின்றனர். இதுதான் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

யோகி பாபு: பெரிய உடலும், பரட்டை தலையும் என்று இவருடைய தோற்றத்தை பார்த்தாலே பலருக்கும் வில்லன் போன்று தான் தோன்றும். ஆரம்பத்தில் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு பிறகு காமெடியனாக கலக்க ஆரம்பித்தார்.

அதன் மூலம் குழந்தை ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய தோற்றத்தை வைத்து இவருடன் நடிக்க மறுத்த நடிகைகள் ஏராளம். ஆனால் அந்த அவமானங்களையே தூண்டுகோலாக எடுத்துக் கொண்டு இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

Also read:நடிச்சா ஹீரோ தான் என வீணாப்போன 6 ஹீரோக்கள்.. பொழைக்கத் தெரியாத புள்ளைங்க!

வடிவேலு: நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி காமெடியனாக இருந்த இவர் தற்போது ஹீரோ அந்தஸ்தை பெற்றுள்ளார். ஆனால் இவருக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளும் தயங்கினர். ஒரு காமெடியனுக்கு ஜோடியாக நடிப்பதா என்று ஹீரோயின்கள் யோசித்த நிலையில் நடிகை சதா மட்டும் இவருக்கு ஜோடியாக நடிக்க முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News