ரஜினியை வந்து என் படத்தில் நடிக்க சொல்லுங்கள்.. ஆவேசமாய் வந்த வாய்ப்பை மறுத்த குணச்சித்திர நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தில் சின்ன காட்சியிலாவது வந்து விட மாட்டோமோ பல பெரிய நடிகர், நடிகைகள் ஏங்கி கொண்டிருக்கின்றனர். ஆனால் ரஜினியின் மிகப்பெரிய ஹிட் படத்தில் நடிப்பதற்கு உச்ச நட்சத்திர நடிகர் ஒருவர் மறுத்துள்ளார்.

ரஜினியின் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி. ஏவிஎம் ப்ரொடக்சனில் இயக்குனர் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இந்தியாவில் முதன் முதலில் டால்பி ஆடம்ஸ் ஒலி தொழில்நுட்பத்தை பயன்படுத்திய திரைப்படம்.

Also Read :17 வருடம் கழித்து நேருக்கு நேராக மோதும் ரஜினி, கமல்.. அனல் பறக்கும் அப்டேட்!

60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலக அளவில் 250 கோடி வசூல் செய்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் சுமன் நடித்திருப்பார். இந்த அப்படத்தின் இடைவேளை காட்சி ரஜினி vs சுமன் பயங்கர மாஸாக இருக்கும்.

சுமனின் இந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடிக்க அணுகியது நடிகர் சத்யராஜ் தான். சத்யராஜ் ஏற்கனவே மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். மேலும் சத்யராஜ் ரஜினிக்கு வில்லனாக நடித்த மிஸ்டர் பாரத், கமலுக்கு வில்லனாக நடித்த காக்கி சட்டை திரைப்படம் மக்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றது.

Also Read :ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த மாஸ் ஹீரோ.. கடைசிவரை பண்ணாத நெகட்டிவ் கேரக்டர்

சிவாஜி படத்திற்காக சத்யராஜை அணுகிய போது அவர் அதில் நடிக்க மறுத்து விட்டார், அந்த நேரத்தில் சத்யராஜுக்கு நல்ல பட வாய்ப்புகள் அமைந்து கொண்டிருந்த நேரம் என்பதால் உங்கள் ரஜினியை வேண்டுமானால் என் படத்தில் நடிக்க சொல்லுங்கள் என சொல்லி விட்டாராம். ஆனால் அதற்கு பிறகு சத்யராஜ் இசை போன்ற படங்களில் வில்லனாக நடித்தார்.

காவிரி பிரச்சனைக்காக தமிழ் நடிகர்கள் போராட்டம் செய்த போது, ரஜினி முன்னிலையிலேயே சத்யராஜ் கன்னடர்களை ஆதங்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Also Read :ரஜினி ரசிகர்களால் நெல்சனுக்கு வந்த தலைவலி.. இப்படியெல்லாமா சோதிக்கிறது