வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை அவமானப்படுத்திய விஜய் படக்குழு.. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல

விஜய்யின் படப்பிடிப்பு ஒன்றில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துக் கொண்டிருக்கும் முக்கிய நடிகர் ஒருவர், தான் அவமானப்படுத்தப்பட்டதாக சமீப பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானது என்பது எளிதான விஷயம் இல்லை. அதிலும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அது ஒரு போராட்டமாகவே இருக்கும். சில நேரங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகும் தியேட்டர் காட்சியில் நாம் இருப்போமான்னு கடைசி வரை பதறிக் கொண்டே இருக்கும் சூழ்நிலையும் வரும்.

Also read: சொகுசு வீடு வாங்கிய விஜய்.. விலை எவ்வளவு தெரியுமா?

வெள்ளித்திரையில் இருந்து ஈசியாக சின்ன திரைக்கு வந்து விடுகிறார்கள். சின்னத்திரையில் இருக்கும் நடிகர்களுக்கு வெள்ளித்திரை வாய்ப்பு என்பதெல்லாம் ஒரு மிகப்பெரிய கனவாகவே இருக்கும். அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களில் எல்லாம் வாய்ப்பு கொடுப்பது என்பது அவ்வளவு ஈஸியானது இல்லை.

விஜய் டிவியின் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸின் முக்கிய நடிகரான ஒருவருக்கு விஜயின் வாரிசு படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. அவர் புகைப்படங்களை அனுப்பி, மேக்கப் டெஸ்ட் முடித்து, சூட்டிங் ஸ்பாட் வரைக்கும் சென்ற பின் அந்த படக்குழு அவரை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் அவர் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார்.

Also read: அவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்.. விஜய்க்காக காத்திருக்கும் கௌதம் மேனன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் ரவி என்பவர் முக்கியமான கேரக்டரில் வருகிறார். அண்ணன் தம்பி நான்கு பேரில் முதல் தம்பி ஜீவாவை திருமணம் செய்திருக்கும் மீனாவின் அப்பாவாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் அந்த சீரியலில் வில்லன் என்று கூட சொல்லலாம். பக்காவாக மிரட்டி கொண்டிருக்கிறார்.

இவருக்கு நடந்த இந்த சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் உள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி விஜய்க்கு தெரியாது எனவும் கண்டிப்பாக விஜய் சார் அவரை நேரில் பார்த்தால் இதைப்பற்றி நான் கூறுவேன் என தெரிவித்துள்ளார். அந்த பேட்டியை பார்த்த பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also read: இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த விஜய்.. அஜித் ஆள் அட்ரஸ் காணுமே

Trending News