ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த ராகுல் டிராவிட்.. நம்பி மோசம் போன ரோகித் ஷர்மா

ஆசிய கோப்பையில் இனிவரும் இரண்டு போட்டிகளிலுமே இந்தியாவிற்கு பலப்பரீட்சை தான். ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணியுடன் இந்தியா மோதவிருக்கிறது. இரு அணிகளுமே அபாயகரமானது என்பதில் சந்தேகமே இல்லை. வரும் போட்டிகளில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் அதிரடி மாற்றம் கொண்டு வர டிராவிட் முடிவெடுத்துள்ளார்.

பாகிஸ்தானுடனான தோல்விக்கு காரணமான விசயங்களை களை எடுத்து வருகிறார் ராகுல் டிராவிட். இந்த போட்டியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களை மட்டும் குறை சொன்னால் போதாது . இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதும் ஒரு காரணம்.

Also Read: அநியாயம் செய்யும் ராகுல் டிராவிட்.. இந்திய அணி நட்சத்திர வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

நல்ல பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கை ஒதுக்கி விட்டு, ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கொடுத்ததும் ஒரு பெரிய தவறு என்று கூறுகின்றார்கள். அவர் ஆடிய விதத்தை பார்த்து ரோகித் சர்மா மிகவும் வேதனை அடைந்துள்ளார். இவரை நம்பி தினேஷ் கார்த்திக்கை எடுக்காத தவறையும் புரிந்து கொண்டார்.

இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் குறைவு, அதனால் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஐடியாவை எல்லாம் இப்பொழுது ராகுல் டிராவிட் ஒதுக்கி வைத்துவிட்டார்.இனி வரும் போட்டிகளில் வழக்கமான பேட்டிங் பலத்துடன் களம் இறங்க போவதாகவும், அதன்படி லோயர் ஆர்டரில் இனி பண்ட்-க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களம் இறக்க திட்டமிட்டுள்ளார்.

Also Read: தலைகனம் இல்லாத ராகுல் டிராவிட்.. கங்குலியை வியக்க வைத்த அந்த செயல்!

இனிவரும் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோத வேண்டியதிருக்கும். ஆகையால் ராகுல் டிராவிட மற்றும் கேப்டன் ரோகித் சர்மா பல அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறார்கள். எதிரணியின் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக விராட்கோலி மீண்டும் பார்மிற்கு வந்தது இந்திய அணிக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டாக அமைகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்காவிற்குற்கு எதிரான போட்டிகளில் கோலியின் பங்களிப்பு நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மனைவியுடன் ரோமன்ஸ் செய்யும் ரோகித்ஷர்மா.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Trending News