சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

வியாபாரத்திற்காக பயன்படுத்தப்படும் விஜயசேதுபதி.. வளர்த்துவிட்ட குருவுக்கு வந்த ஆவேசம்

சினிமா பின்புலம் இல்லாமல் தன்னம்பிக்கை, விட முயற்சியால் தற்போது ஒரு மாசான இடத்தை பிடித்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது உள்ள இளம் நடிகருக்கு எடுத்துக்காட்டாக விஜய் சேதுபதி உள்ளார். இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதி பற்றி ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான பெரும்பான்மையான படங்களில் விஜய் சேதுபதி தான் கதாநாயகனாக நடித்திருந்தார். தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை மாமனிதன் போன்ற படங்களில் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து சீனு ராமசாமி எடுத்து வெற்றி கண்டுள்ளார்.

Also Read :விஜய் சேதுபதியால் கிடைத்த வாழ்வு.. இரண்டு கோடிக்கு வீடு வாங்கிய உதவியாளர்

இந்நிலையில் விஜய் சேதுபதி வருஷத்திற்கு பல படங்களில் நடிப்பதாக குற்றச்சாட்டுகள் வருகிறது என சீனு ராமசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. மேலும் வில்லன், ஹீரோ, குணச்சித்திர நடிகர் என மாறி மாறி இவர் நடிப்பதை பற்றிய அபிப்ராயம் என்ன என்பதும் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சீனு ராமசாமி, ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் விஜய் சேதுபதி நடித்து பாலிவுட் வரை சென்றுள்ளார். இதை நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக தான் உள்ளது. ஆனால் விஜய், ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் விஜய் சேதுபதியின் படத்தில் நடிப்பார்களா.

Also Read :விஜய் சேதுபதியை நம்பாமல் கார்த்திக் செய்த வேலை.. இது எல்லாம் நல்லாவா இருக்கு விருமா!

இது அந்த நடிகர்களின் படம். அவர்களின் வியாபாரத்திற்காக விஜய் சேதுபதி அவர்கள் படத்தில் நடிக்கிறார். ஆடுறவன் கால இழக்கலாமா என விஜய் சேதுபதியிடம் நேராகவே நான் கேள்வி கேட்டுள்ளேன். ஒரு ஹீரோ அந்தஸ்து உடையவன் ஹீரோவாகவே தான் நடித்து வர வேண்டும்.

தமிழ் சினிமா பொறுத்தவரை ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து விட்டால் அவர் தான் ஹீரோ, அதேபோல் வில்லன், அக்கா, அம்மா அந்த கேரக்டராகவே தமிழ் ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு படத்தில் கொடூர வில்லனாக நடித்துவிட்டு, அடுத்த படத்தில் ஹீரோவாக நடித்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சீனு ராமசாமி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Also Read :மாமனிதனாக சீனு ராமசாமிக்கு கிடைத்த சக்சஸ்.. ரஜினியை அடுத்து பாராட்டிய முன்னணி இயக்குனர்!

Trending News