பொன்னியின் செல்வன் விழாவில் சேட்டை செய்த சித்தார்த்.. அரங்கத்தை திரும்பிப் பார்க்க வைத்த திரிஷா

தமிழ் திரையுலகமே மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. ரஜினி, கமல் மற்றும் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட அந்த விழாவில் பல செலிபிரிட்டிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அதில் நடிகர் சித்தார்த்தும் கலந்து கொண்டார். இவர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது விழாவில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பல பாடல்களையும் இசை குழுவினர் பாடி அசத்தினார்கள். அதில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம் பெற்ற யாக்கை திரி என்ற பாடலும் பாடப்பட்டது.

அந்த பாடலை கேட்ட உடனே சித்தார்த் மற்றும் த்ரிஷாவுக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. உட்கார்ந்த இடத்திலேயே த்ரிஷா அந்த பாடலை முணுமுணுத்த படி ஆட ஆரம்பித்து விட்டார். அவருக்கு பின் வீட்டில் அமர்ந்திருந்த சித்தார்த் த்ரிஷாவை பின்னாலிருந்து அணைத்தபடி உற்சாக மிகுதியில் பாடினார்.

அந்த இடத்தை சுற்றிலும் பல முன்னணி நட்சத்திரங்கள் அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீண்ட வருடங்கள் கழித்து தங்கள் பாடலை மேடையில் கேட்ட சந்தோஷத்தில் சுற்றுப்புறத்தையே அவர்கள் மறந்து விட்டனர்.

இவர்களின் இந்த உற்சாக ஆட்டத்தை அருகில் அமர்ந்திருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தனர். தற்போது அந்த விழாவில் எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வைரலாகி கொண்டிருக்கிறது. அவர்களின் உற்சாக நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் சித்தார்த் இன்னும் பழசை மறக்கவில்லை என்றும் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். ஆயுத எழுத்து படம் வெளியான சமயத்தில் திரிஷா மற்றும் சித்தார்த் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்து பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.