பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்ட சம்பளம்.. கோடியில் புரளும் உலகநாயகன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் மட்டும் தான். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது.

இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. திரை பிரபலங்கள் உட்பட சாமானிய மனிதர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் படியான சில மாறுதல்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் சம்பளம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதற்கு முன்பாக அவர் இந்த நிகழ்ச்சிக்காக 75 கோடி வரை சம்பளமாக பெற்றார். ஆனால் தற்போது அவர் தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கிறார். அதாவது கமல் தற்போது தொகுத்து வழங்க இருக்கும் இந்த சீசனுக்காக 130 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம்.

கமலுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே பயங்கர வரவேற்பு இருக்கும். அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் வரும் வார இறுதி நாட்களில் விஜய் டிவியின் டிஆர்பி எக்கச்சக்கமாக உயரும். அவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் இருக்கின்றனர். அவரால் மட்டும் தான் இந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாதது.

அதனால் அவர் கேட்ட அந்த சம்பளத்தையே பிக் பாஸ் தயாரிப்பு நிர்வாகம் மறுபேச்சு பேசாமல் கொடுக்க சம்மதித்து விட்டதாம். இதற்கு விக்ரம் திரைப்படத்தின் மூலம் கிடைத்த மிகப்பெரிய லாபமும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமலை வைத்து நல்ல லாபம் பார்க்கவும் திட்டமிட்டுள்ளது.

விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி ரக்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் நாம் எதிர்பார்க்காத இன்னும் சில சர்ச்சை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதனால் இந்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கப்படும் என்று ஆண்டவரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.