திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இளையராஜா பாஞ்சாயத்து கூட்டின 4 பெரும் புள்ளிகள்.. காதில் கூட கேட்காத ஏ ஆர் ரகுமான்

இளையராஜா 1976 ல் தன்னுடைய இசை பயணத்தை தொடர்ந்து இன்றுவரை தென்னிந்திய இசையின் அரசனாக இருக்கிறார். இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். 1000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இளையராஜா ராஜ்ய சபா உறுப்பினர் ஆனார். இதற்கு பலதரப்பட்ட மக்களும் வாழ்த்து தெரிவித்தனர். இளையராஜாவின் இசை ரசிக்கப்படும் அளவிற்கு அவரை இப்போது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். இதற்கு காரணம் அவருடைய ஒரு சில மேடை பேச்சுகளும், அவர் இழுத்து வந்த பஞ்சாயத்துகளும் தான்.

Also Read: முதன்முதலாக தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர்.. இசைஞானி, ஏ ஆர் ரகுமானுக்கெல்லாம் இவர் தான் குரு

வைரமுத்து: ஆரம்ப காலங்களில் இளையராஜா இசைக்கு அதிக பாட்டு எழுதிய வைரமுத்து, ஒரு கட்டத்தில் பிசியாக இளையராஜாவின் ஒலிப்பதிவில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் மெட்டுகளுக்கு ஏற்ப பாடல் வரிகளை ராஜாவே மாற்ற இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய விரிசல் ஆனது. ‘இசைபாடும் தென்றல்’ படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையவே இல்லை.

பாரதிராஜா: இளையராஜாவும் , பாரதிராஜாவும் பால்ய காலத்து நண்பர்கள். பாரதிராஜா படம் என்றாலே அதில் இளையராஜா தான் இசை என்று படம் பார்க்காமலே சொல்லி விடலாம். ஆனால் இவர்கள் இருவருமே ஒரு சில பிரச்சனைகளால் ‘நாடோடி தென்றல்’ படத்திற்கு பிறகு இணையவே இல்லை.

SP பாலசுப்ரமணியம்: இளையராஜா- SP பாலசுப்ரமணியம் கூட்டணியில் 500 க்கும் மேற்பட்ட பாடல்கள் ஹிட் ஆகி இருக்கின்றன. SP பாலசுப்ரமணியம் பல்வேறு நாடுகளில் இசை கச்சேரிகள் நடத்தி வந்தார். ஆனால் இளையராஜா அவருடைய பாடல்கள் அனைத்திற்குமே காப்பிரைட்ஸ் கோரி வழக்கு தொடுத்து SPB யின் ஒரு கச்சேரியையே நிறுத்தி விட்டார்.

Also Read:மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி

AR ரஹ்மான்: AR ரஹ்மான் தன்னுடைய 11 வது வயதில் இளையராஜாவின் கீபோர்ட் குழுவில் இணைந்தார். மணிரத்தினத்தின் ரோஜா படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான AR ரஹ்மான் தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இந்தியாவின் பெருமைமிகு ஆஸ்கார் நாயகனான AR ரஹ்மானை இளையராஜா பல மேடைகளில் மரியாதை இல்லாமல் பேசியிருக்கிறார்.

நடிகை ரோகிணி: தென்னிந்திய நடிகர் சங்கத்தினரால் சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரோகிணி மணிரத்தினத்திடம் நீங்கள் இருவரும் இணைந்து எப்போது படம் பண்ணுவீர்கள் என்று கேட்ட போது இளையராஜா, நீ எனக்கு வாய்ப்பு வாங்கி தரியா என ரோகிணியை மரியாதை இல்லாமல் பேசி இருப்பார். இது அரங்கத்தில் உள்ளோர் முகம் சுழிக்கும்படி இருந்தது.

Also Read: இளையராஜாவை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள்.. வாய்ப்புகள் பறிபோனாலும் வீம்பாய் நின்ற இசைஞானி

Trending News