புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நெட்பிளிக்ஸில் அதிகம் பார்த்த டாப் 5 படங்கள்.. ஆஸ்கார் இல்லாட்டாலும், ஆறுதலா இருக்கும் ஆர்ஆர்ஆர்

ஒரு படம் ரிலீஸ் ஆகி எத்தனை நாட்கள் தியேட்டரில் ஓடுகிறது என்பது தான் முன்பெல்லாம் கணக்காக இருந்தது. இப்போது ஓடிடி தளங்கள் அதிக ட்ரெண்டாகி விட்டன. படத்தின் வியூஸ் கணக்கை அவ்வப்போது வெளியிட்டு படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்த வரிசையில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வியூஸ்களை கொண்டு டாப் ஐந்து இடங்களில் இருக்கும் படங்களின் லிஸ்டுகளை வெளியிட்டு இருக்கிறது.

Also Read500 கோடி கொட்டியும் செலக்ட் ஆகாத ஆர்ஆர்ஆர்.. ஆஸ்காருக்கு தேர்வான ஒரே மினி பட்ஜெட் இந்தியன் மூவி

ஆர்ஆர்ஆர்: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது. தியேட்டர் ரிலீசிலேயே மொத்தம் 1000 கோடி வசூல் பார்த்துவிட்டது. ஆர்ஆர்ஆர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் zee5 தளத்தில் ரிலீஸ் ஆனது. ஹிந்தி ஆர்ஆர்ஆர் நெட்ப்ளிக்சில் ரிலீஸ் ஆனது. இந்த ஹிந்தி ஆர்ஆர்ஆர் படம் 72.1 மில்லியன் பார்வையாளர்களோடு முதல் இடத்தில் உள்ளது.

கங்குபாய் : பாலிவூடில் அடுத்தடுத்து ரிலீசான பெரிய ஹீரோக்களின் படங்கள் சொதப்பிக்கொண்டிருந்த நிலையில் இந்தி திரையுலகின் கொஞ்சம் மரியாதையை காப்பாற்றிய படம் கங்குபாய் தான். இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் இப்போது நெட்ப்ளிக்சில் 50.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Also Read:உப்பு சப்பில்லாமல் போன ஆலியா பட்.. ராஜமவுலி பட விவகாரத்தில் அந்தர்பல்டி

டார்லிங்ஸ் : இயக்குனர் ஜஸ்மீட் இயக்கத்தில் ஆலியா பட் நடித்த திரைப்படம் டார்லிங்ஸ். குடிக்கு அடிமையான கணவனின் சித்திரவதயை நாள்தோறும் தாங்கி கொண்டிருக்கும் பெண், இறுதியில் அதிலிருந்து எப்படி வெளி வருகிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் ஆலியாவின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இந்த படம் நெட்ப்ளிக்சில் 32.3 மில்லியன் பார்வையாளர்களை கொண்டிருக்கிறது.

மின்னல் முரளி : இயக்குனர் பஷில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்த திரைப்படம் மின்னல் முரளி. இந்த படம் சூப்பர் மென், மார்வல்ஸ் பட பாணியில் முழுக்கு இந்திய தன்மையுடன் உருவான திரைப்படம். தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நெட்ப்ளிக்சில் இதுவரை 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.

சூர்யவன்ஷி: ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் கரண் ஜோஹர் தயாரிப்பில் நடிகர்கள் அஜய் தேவ்கான், ரன்வீர் சிங், கத்ரினா கைப் நடித்த திரைப்படம் சூர்யவன்ஷி. 160 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தியேட்டர் ரிலீசிலேயே 294 கோடி வசூல் செய்தது. நெட்ப்ளிக்சில் இதுவரை 24.3 மில்லியன் வியூஸ்களை கொண்டிருக்கிறது.

Also Readமின்னல் முரளி படத்திற்காக அடித்துக்கொள்ளும் 2 பிரபலங்கள்.. என்ன காரணம் தெரியுமா.?

Trending News