தன்னுடைய 4 வயதிலிருந்து தற்போது 67 வயது வரை சினிமாவில் தன்னையே அர்ப்பணித்து, உலக நாயகனாக ரசிகர்களை கவர்ந்த கமலஹாசன் கடைசியாக வாங்கிய 5 படங்களில் சம்பளம் மற்ற தமிழ் ஹீரோக்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது.
உத்தம வில்லன்: 2015 ஆம் ஆண்டு ராஜேஷ் அரவிந்த் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற 3 மொழிகளில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் திரைப்படத்திற்காக அவர் 30 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
Also Read: அனைவரையும் வாழவைக்கும் சினிமா, என்னை மட்டும் எதிர்த்தது.. உண்மையை சொன்ன கமல்
தூங்காவனம்: அதே ஆண்டில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் அதிரடித் திரில்லர் திரைப் படமாக வெளியான இந்த படத்தில் கமல்ஹாசனுடன் பிரகாஷ்ராஜ், திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
தமிழ், தெலுங்கு போன்ற 2 மொழிகளில் உருவான இந்த படம் அந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்திற்காக கமல் 30 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
விஸ்வரூபம் 2: அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. விஸ்வரூபம் 2 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவை ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தி, இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த படத்திற்காக கமல் 35 கோடி சம்பளம் வாங்கினார்
Also Read: கமல், விக்ரமிற்கு டஃப் கொடுக்கும் சூர்யா.. ஒரே படத்தில் இத்தனை கெட்டப்புகளா?
விக்ரம்: உலகநாயகனின் 60 ஆண்டு சினிமா பயணத்தில் ஏற்படாத சாதனைகளை நிகழ்த்திய படமாக அமைந்தது விக்ரம். லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கிய இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து பாக்ஸ் ஆபிஸில் 450 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்தது.
இந்தப் படம் வெளிவந்த பிறகு கமலின் ரேஞ்ச் வேற லெவலுக்கு உயர்ந்தது. ஏற்கனவே அவர் வாங்கிய சம்பளத்திலிருந்து 4 மடங்கு அதிகமாக விக்ரம் படத்திற்கு கிடைத்தது. விக்ரம் படத்திற்காக கமல் சுமார் 130 கோடி சம்பளமாக பெற்று இருக்கிறார்.
Also Read: 10 நிமிட காட்சிக்காக கமல் செய்த சாதனை.. ஆச்சரியமாய் பார்த்த சங்கர்
இந்தியன் 2: பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்துக்கு சம்பளமாக கமல் 150 கோடி பெற்று தமிழ் ஹீரோக்களை வியந்து பார்க்க வைத்திருக்கிறார்.
இன்னும் அடுத்தடுத்த படங்களில் உலகநாயகனே சம்பளம் உயர்ந்து கொண்டே போகும். இவருடைய இந்த அசுர வளர்ச்சியை கோலிவுட் பெருமையுடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கிறது.