தற்போதைய சினிமா உலகில் ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்குவதில் இந்த நிறுவனங்களுக்குள் பலத்த போட்டியே நடைபெறுகிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திரைப்படங்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது.
அந்த வகையில் இந்த ரேஸில் இப்போது அமேசான், டிஸ்னி ஹாட் ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தான் முன்னிலையில் இருக்கின்றன. பிரபல நடிகர்களின் திரைப்படங்களை இந்த மூன்று நிறுவனங்கள் தான் அடுத்தடுத்து வாங்கி வருகின்றது.
Also read : டாப் 5 நடிகர்களின் படங்களை கைப்பற்றிய OTT நிறுவனங்கள்.. போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய நெட்பிளிக்ஸ், அமேசான்
அதிலும் சமீபகாலமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களுக்கு வலை விரித்து கொண்டிருக்கிறது. அதில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இந்த நிறுவனம் 38 கோடி ரூபாய்க்கும், சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தை 36 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளது.
அது மட்டுமல்லாமல் இன்னும் பூஜை கூட போடப்படாத விஜய் மற்றும் லோகேஷ் இணையும் திரைப்படத்தையும் இந்த நிறுவனம் முன்கூட்டியே ஒரு பெரிய தொகைக்கு வாங்கி இருப்பது தான் ஆச்சரியம். மேலும் அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் உரிமையையும் இந்த நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
Also read : OTT வியாபாரத்திற்காக கோப்ரா தயாரிப்பாளர் செய்த காரியம்.. கெஞ்சி வாங்கிய தணிக்கை சான்றிதழ்
அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கும் அந்த திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் 250 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த நிறுவனத்தின் வியாபார தந்திரத்தை பற்றி தான் திரையுலகில் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.
இப்படி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மற்ற ஓடிடி தளங்கள் அனைத்தையும் ஓரங்கட்டி வருவதால் அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற நிறுவனங்களும் தற்போது போட்டியை சமாளிக்க முடியாமல் திணறிப் போய் வருகிறது. அந்த வகையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது மற்ற நிறுவனங்களை தடம் தெரியாமல் அழித்து முன்னேறிக் கொண்டிருப்பதாக பரவலாக ஒரு பேச்சு கிளம்பி இருக்கிறது.
Also read : சமீபத்தில் OTT-யிலும் கல்லா கட்டிய 15 படங்கள்.. முழு படத்தை பார்க்க கிளிக் செய்யவும்