சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக இந்த படம் வெளியாகி இருந்தது. முதலில் வெளியான இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்திருந்தது.
இந்நிலையில் வெந்த தணிந்தது காடு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படம் கேங்ஸ்டர் கதையில் எடுக்கப்பட்டுள்ளதால் இதற்கு முன்பு வெளியான கேங்ஸ்டர் படங்களோடு ரசிகர்கள் வெந்து தணிந்தது காடு படத்தை ஒப்பிட்டு கேலி செய்து வந்தார்கள்.
இதனால் திரையரங்கு வெளியீட்டில் வெந்து தணிந்தது காடு படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்க வில்லை. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 2 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு பைக்கை இயக்குனர் கௌதம் மேனனுக்கு பரிசாக வழங்கினார். மேலும் 90 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா வெல்ஃபையர் காரை அன்பளிப்பாக கொடுத்தார்.
வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளில் லாபம் பெறாத சூழ்நிலையில் இவர் ஏன் பரிசை வாரி வழங்கினார் என்று பலருக்கும் கேள்வி எழுந்திருக்கும். ஏனென்றால் இப்படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. அதாவது படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் மற்றும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் போன்றவற்றில் மொத்தமாக 25 கோடிக்கு மேல் லாபமாம்.
இதனால் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்த ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படக்குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கி உள்ளார். எப்படியோ திரையரங்குகளில் லாபம் கிடைக்கவில்லை என்றாலும் டிஜிட்டல் உரிமை போன்றவற்றால் லாபம் கிடைத்ததால் அண்ணாச்சி ரொம்ப ஹாப்பியாக உள்ளாராம்.
கமலின் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற திட்டத்திலும் ஐசரி கணேஷ் உள்ளார். ஏனென்றால் கடைசியாக விக்ரம் படம் வசூல் வேட்டையாடிய நிலையில் அடுத்த கொக்கியை கமலுக்கு போட்டு உள்ளார். ஆனால் கமல் தற்போது படு பிஸியாக உள்ளதால் இப்போதைக்கு அந்தப் படம் உருவாக வாய்ப்பில்லை.