வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அதிர்ச்சியை கிளப்பும் அடுத்தடுத்த மரணம்.. தற்கொலை செய்து கொண்ட மர்ம தேசம் குழந்தை நட்சத்திரம்

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றுதான் மர்ம தேசம். சன் டிவி மற்றும் ராஜ் டிவியில் ஒளிபரப்பான திகிலும், மர்மமும் கலந்த அந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் பலரையும் மிரட்டிய இந்த சீரியல் இப்போது வரை பலரின் ஃபேவரைட் ஆக இருக்கிறது.

அந்த சீரியலில் குட்டி ராசுவாக நடித்தவர் தான் லோகேஷ் ராஜேந்திரன். அதைத் தொடர்ந்து ஜீபூம்பா என்ற தொடரிலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளை பெற்றிருக்கும் இவர் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

Also read:நடுநடுங்க வைத்த மர்ம தேசம் சீரியல் குழந்தை நட்சத்திரம் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? வெளியான புகைப்படம்

விரைவில் பெரிய திரையில் இயக்குனராக முயற்சி எடுத்து வந்த இவர் கடந்த செப்டம்பர் 1ம் தேதி திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடைய இந்த மரணம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அவருடைய மரணத்திற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். லோகேஷின் தற்கொலை குறித்து குறித்து அவருடைய அப்பா மிகவும் வேதனையுடன் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, லோகேஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு அனுஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். அதன் பிறகு அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது எனக்கு தெரியவந்தது.

Also read:தமிழ் நடிகைகளின் அதிர்ச்சி தற்கொலைகள்.. ஓர் இரவில் நடந்த விடைதெரியாத மர்மங்கள்

இதனால் அவர் தீராத மன உளைச்சலில் அவர் இருந்திருக்கிறார். இதுதான் அவரை இந்த முடிவுக்கு தள்ளி இருக்க வேண்டும். அவரை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு தான் எனக்கு தகவல் தெரியவந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் என் மகன் இறந்து விட்டார். அவருடைய உடலை வாங்கக்கூட அவர் மனைவி விரும்பவில்லை என்று வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் பாடல் ஆசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத ரசிகர்களுக்கு இந்த மரணம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படி அடுத்தடுத்து தொடரும் தற்கொலைகளால் திரையுலகம் ஸ்தம்பித்து போய் உள்ளது. லோகேஷ் ராஜேந்திரனின் இந்த மரணம் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Also read:90 கிட்ஸ் விரும்பிப் பார்த்த 5 தொடர்கள்.. 900 எபிசோடுகள் கலக்கி ஹிட் அடித்த ரெகார்ட்

Trending News