வெளியவே தலைகாட்ட முடியாமல் செய்த நயன்தாரா.. அழுது புலம்பிய அப்பா, அம்மா

நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்த திருமணம் அதையும் இவர்கள் பணத்திற்காக சர்ச்சையில் ஆக மாற்றி பிரபலங்களையும் வரவழைத்து அவர்களையும் கோபத்துக்கு உள்ளாக்கினர். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர்கள் திருமணம் நல்ல முறையில் நடைபெற்று அனைவரும் எதிர்பார்த்த வகையில் ஹனிமூன் சென்று பல புகைப்படங்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து மகிழ்ச்சியை தந்தன. ஹனிமூன் கூட செலவில்லாமல் இவர்கள் புகழை பரப்பி வந்தனர். இதில் சர்ச்சை வெடித்தது, அனைத்திலும் சர்ச்சையை மட்டுமே மையமாக வைத்து இவர்கள் மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.

இப்படி இருக்கும் வேளையில் திடீரென நயன்தாரா, விக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் அம்மா, அப்பா ஆகிவிட்டோம் எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து இருக்கிறது என்று போட்டோவை போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். குழந்தை பெற்றது சந்தோஷமாக இருந்தாலும் நான்கு மாதம் திருமண காலத்தில் எப்படி இது சாத்தியம் என்ற கேள்வி எழ தொடங்கியது. பின்னர் இதனை ஆராய்ந்து இதை பற்றி பேசிப்பேசி இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது அனைவருக்கும் தெரியவந்தது.

நம்ம என்னதான் அவர்களைப் பற்றி பேசினாலும் அவர்கள் குடும்பம் இதைப் பற்றி பேசாமல் இருப்பார்களா என்ன? விக்கியை வளர்த்த அவரது பெரியப்பா, பெரியம்மா திருமணத்திற்கு அழைக்காமல் அவமானப்படுத்தப் பட்டார்கள் என்பது தெரியும். இப்பொழுது இவர்கள் தலைகாட்ட முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர் காரணம் இவர்களிடம் இவர்களைப் பற்றி கேட்டு இவர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர் என்று அழுதுகொண்டே கூறியுள்ளனர். விக்கியின் பெரியம்மா கூறுகையில் திருமணத்திற்கு முன்பு இவர்கள் பத்து மாதத்தில் திட்டம் தீட்டி யாருக்கும் தெரியாமல் இதனை செய்து வந்துள்ளனர், இதுவே எங்களுக்கு அசிங்கம் தான்.

இதே போல் நயன்தாரா குடும்பத்தினரும் இதே அறிக்கையை வெளியிட்டனர், என்னதான் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இவர் செய்தது இவர் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்பது வருத்தமளிக்கிறது. இதற்கு இவர்கள் எப்படி சமாதானம் செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

நயன்தாரா காதலிக்கும் போதும் சர்ச்சை, கல்யாணத்திலும் சர்ச்சை, ஹனிமூன் சர்ச்சை, இப்பொழுது குழந்தை பெற்றதும் சர்ச்சை, இவர்களால் குடும்பத்திலும் சர்ச்சை இதைப் போல் எந்த ஒரு நடிகையும் இருந்ததில்லை. இவர் அனைவருக்கும் உதாரணமாக இருப்பார் என்று நினைத்த பொழுது இவர் ரசிகர்களே இவரை வெறுக்கத் தொடங்கி உள்ளனர். இதை மக்களிடம் அவர் கூற வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து நடிப்பதில் இவருக்கு பல பிரச்சினைகள் மற்றும் ரசிகர்களை இழப்பார்கள் என்பது கோலிவுட்டில் பல சினிமா பிரபலங்கள் பேசிக்கொள்கிறார்கள்.