செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

ஆஸ்காரில் இதுவரை நாமினேட் செய்யப்பட்ட 8 தமிழ் படங்கள்.. நான்கு கமல் சந்தித்த ஏமாற்றம்!

உலக சினிமா கலைஞர்களின் சிம்ம சொப்பனமாக விளங்குவது என்றால் அது ஆஸ்கார் அகாடமி விருது தான். ஒவ்வொரு சினிமா கலைஞனும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது ஆஸ்கார் அவார்டை வாங்கிவிட வேண்டும் என்று ஏங்கி கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆஸ்கார் விருது இன்னும் எட்டாத கனி தான். இருந்தாலும் தமிழ் படங்கள் நிறைய ஆஸ்கார் தேர்வுக்கு சென்று இருக்கின்றன. இதுவரை ஆஸ்காரில் நாமினேட் செய்யப்பட்ட தமிழ் படங்கள்,

தெய்வமகன்: ஆஸ்காருக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் படம் என்ற பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தெய்வமகனை சேரும். தொழில்நுட்பங்கள் சரியாக வளராத காலத்திலேயே சிவாஜி மூன்று கேரக்டரில் நடித்திருப்பார். இதில் அப்பா சிவாஜிக்கு போடப்பட்ட மேக்கப் அந்த காலத்தில் மிகவும் கஷ்டமான ஒன்று தான்.

Also Read : சிவாஜி படங்களில் ‘A’ சர்டிபிகேட் வாங்கிய ஒரே படம்.. முகம் சுளிக்க வைத்த காட்சிகள்

நாயகன்: ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலஹாசனின் முதல் திரைப்படம் நாயகன். இந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினம். மும்பையை சேர்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஜனகராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தனர்.

அஞ்சலி: அஞ்சலி 1990 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம். முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக கொண்ட இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரகுவரன், ரேவதி, பிரபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

தேவர்மகன்: தேவர்மகன் 1992 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம். இந்த படத்திற்கான கதை, திரைக்கதையை ஒரு வாரத்திலேயே கமலஹாசன் எழுதி முடித்துவிட்டாராம். இந்த படம் அந்த வருடத்திற்கான நிறைய விருதுகளை வாங்கியது. தேவர் மகன் படத்தில் கமலுடன் இணைந்து சிவாஜி கணேசன், ரேவதி, நாசர், தலைவாசல் விஜய், கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர்.

குருதிபுனல்: பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் குருதிப்புனல். இந்த படத்தில் கமல், அர்ஜுன், கௌதமி, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பாடல்களே இருக்காது. ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.

Also Read : கமலின் நிறைவேறாத 2 ஆசைகள்.. திறமைக்கு எங்கப்பா இங்க மதிப்பு இருக்கு

ஜீன்ஸ்: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், லட்சுமி, செந்தில், நாசர், ராதிகா நடித்து 1998 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் ஜீன்ஸ். இந்த படம் நிறைய தொழில்நுட்ப முறையுடன் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் வரும் ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ பாடலுக்காக உலகின் ஏழு அதிசயங்களில் காட்சிகள் எடுக்கப்பட்டது.

ஹேராம் : 2000 ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கி தயாரித்த திரைப்பம் ஹேராம். இந்த படத்தில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ஷாருக் கான், ராணி முகர்ஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் தயாரிப்பிக்கப்பட்டது.

விசாரணை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் விசாரணை. சந்திரகுமாரின் லாக்கப் என்னும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். காவல் துரையின் விசாரணை மற்றும் லாக்கப் டெத் சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர்.

Also Read : கமல் கொண்டு வந்த ட்ரெண்ட்.. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவெடுக்கும் நம்ம சினிமா

- Advertisement -spot_img

Trending News