மக்களைத் தாக்கும் சிவகார்த்திகேயனின் பவுன்சர்கள்.. சூட்டிங் ஸ்பாட்டில் எதையும் கண்டுக்காத எஸ் கே

தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்புகளும் மற்ற மாநிலங்களில் நடைபெற்று வந்தன. சொல்லி வைத்தது போல் அதுவும் ஆந்திராவில் மட்டுமே ரஜினி, விஜய், அஜித் என்று வரிசையாக  சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பின்னர் தமிழ் சினிமா தொழிலாளர்கள் சங்கம்  கண்டித்து வந்தன. பின்னர் அனைத்து படப்பிடிப்புகளும் சென்னையில் நடக்கத் தொடங்கின.

இப்பொழுது சென்னையில் ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் வாரிசு, ஷாருக்கானின்  ஜவான்,சூர்யா திரைப்படம் என்று பல திரைப்படங்கள் மற்றும் சிறு திரைப்படங்களின் படபடிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் கடந்த வாரத்தில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு, விஜயை பார்க்க ஆவலுடன் சென்ற ரசிகர்களை  மீது தடியடி நடத்தப்பட்டது , அவர்களும் வருத்தப்பட்டுக் கொண்டே சென்றனர்.

Also Read : எல்லாமுமாய் இருந்தவரை நம்ப வைத்து கழுத்தறுத்த சிவகார்த்திகேயன்.. காற்றில் பறந்த வாக்குறுதி

இப்பொழுது சிவகார்த்திகேயன் நடிக்கும் படப்பிடிப்பு சென்னை திருவொற்றியூர் உள்ள முடிக்கப்படாத ஒரு மேம்பாலத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அங்கு இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது . அவர்களை தடுத்து நிறுத்தி சிவகார்த்திகேயன் பவுன்சர்கள் சண்டையிட்டனர்.

அந்த பாலத்தை பயன்படுத்தும் மக்களை பார்த்து நில்லுங்கள், அப்புறம் செல்லலாம், வேலைக்கு அப்புறம் போகலாம் என்று பேசுவது அவர்கள் மீது கை வைப்பது , மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இது சிவகார்த்திகேயனுக்கு தெரியாமல் எப்படி நடந்து இருக்கும். தனது வேலைக்காக மக்களை இப்படி செய்வது அநாகரிகமானது, அவரது பெயரை கலங்கப்படுத்தும்.

Also Read : கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. டாப் கியரில் எகிரும் மார்க்கெட்

வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கும் பொழுது அங்கு ஒரு இடத்தில் மட்டும் கூடி அங்கு செட் அமைத்து ஷூட்டிங்கை முடித்துவிட்டு, சத்தமில்லாமல் வந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டில் வந்தால் மட்டும் செட்டு போடாமல் மக்களுக்கு இடையூறு அளிக்கும் விதத்தில் நடுரோட்டில் படப்பிடிப்பை நடத்துவது, மக்கள் கூடும் இடங்களில் படப்பிடிப்பை நடத்துவது இதை போல் செய்து மக்களையும் மிரட்டுவது என்பது தமிழ் நடிகர்களுக்கு ஏற்புடையது அல்ல.

உச்ச நட்சத்திரங்கள் முதல், சிறு நடிகர்கள் வரை தாங்கள் சம்பாதிப்பது,நடிப்பது எல்லாம் மக்களுக்காக மட்டுமே அவர்கள் உங்கள் படங்களை பார்த்தால் மட்டுமே உங்களுக்கு பணம்.  ரசிகர்கள் இதை மறந்து அவர்களை உதாசீனப் படுத்துவது பின்னர் பட புரமோஷனுக்காக அவர்களிடம் நீங்கள், “என் உயிர்”, நீங்கள் இல்லாமல் நான் இல்லை போன்ற வசனங்களை சொல்வது என்பது வரும் காலங்களில் இப்போது உள்ள இளைஞர்களிடம் நடக்காது, இதை எந்த நடிகர்களாக இருந்தாலும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

Also Read : கழுத்தை நெரித்த கடன், காப்பாற்றி விட்ட தயாரிப்பாளர்.. நன்றி கடனுக்காக சம்மதித்த சிவகார்த்திகேயன்

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்