ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ரோஹித் ஷர்மா ரசிகரை அடித்தே கொன்ற விராட் கோலி ரசிகர்.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்

சில சமயங்களில் விளையாட்டு வினையாகும் என்பார்கள். அதேபோல் தற்போது கிரிக்கெட் மோகத்தால் ஒரு விபரீதம் அரியலூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்துள்ளது. கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் உடைய இரண்டு நண்பர்கள் குடித்துவிட்டு சாதாரணமாக பேசி வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் விளையாட்டாக பேச ஆரம்பித்த விஷயம் அதன் பின்பு பூதாகரமாக வெடித்து கொலை செய்யும் அளவிற்க்கு வெறியை உண்டாக்கி உள்ளது. அதாவது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரில் யார் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

Also Read : கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. டாப் கியரில் எகிரும் மார்க்கெட்

அதாவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விக்னேஷ் ஆதரவாளராகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தர்மராஜ் ரசிகராகவும் இருந்துள்ளார். 24 வயதுடைய விக்னேஷ் ஆர் சி பி மற்றும் விராட் கோலியை கேலி செய்துள்ளார். மேலும் தர்மராஜையும் பாடி ஷேமிங் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 21 வயது தர்மராஜ் கிரிக்கெட் மட்டையால் விக்னேஷை தாக்கியுள்ளார். அப்போது சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்ததை அடுத்த தர்மராஜ் தப்பி சென்று விட்டார். மேலும் மறுநாள் விக்னேஷ் அங்கு சடலமாக கிடந்துள்ளார். அதன் பின்பு போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.

Also Read : அழகில் நடிகைகளை மிஞ்சிய 5 கிரிக்கெட் வீராங்கனைகள்.. மாடலிங் வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு

அப்போது தான் கிரிக்கெட் மீது உள்ள மோகத்தால் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு இவ்வாறு நடந்துள்ளது என்ற விஷயத்தை போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களே ஒற்றுமையாக இருக்கும்போது ரசிகர்கள் இவ்வாறு தேவையில்லாமல் அடித்துக் கொண்டு ஒரு உயிர் போகும் அளவிற்கு விபரீதமாக முடிந்துள்ளது.

சினிமா, கிரிக்கெட் என இரண்டிலுமே ரசிகர்கள் அடித்துக் கொள்வது சகஜமாகிவிட்டது. ஆனால் அது ஒரு எல்லைக்கு மேல் போகும்போது தேவையே இல்லாமல் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. இப்போதாவது இதை புரிந்து கொண்டு ரசிகர்களாக மட்டுமே இருந்தால் நல்லது.

Also Read : முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்

Trending News