விஜய்க்கு போட்டியாக ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர்களுடன் அடுத்தடுத்து 5 படங்கள்

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இப்படம் பொங்கலுக்கு வாரிசு திரைப்படத்துடன் மோத இருப்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதை அடுத்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷனில் நடிக்க இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அஜித் லைக்கா நிறுவனத்திற்கு இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஜித் லைக்கா நிறுவனத்திற்காக மூன்று திரைப்படங்கள் நடித்துக் கொடுக்க சம்மதித்திருக்கிறார். ஏற்கனவே லைக்கா நிறுவனம் ரஜினியை வைத்து இரண்டு திரைப்படங்களை எடுக்க திட்டமிட்டு இருக்கிறது.

Also read : அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ரஜினியின் உறவு.. பல வருடங்களாக போராடியும் வாய்ப்பு கிடைக்கவில்லை

அதை தொடர்ந்து தற்போது அஜித்தும் இந்த நிறுவனத்திற்காக நடிக்க இருப்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமல்லாமல் அஜித் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சேர்வது பற்றியும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக அஜித்துடன் இணைய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து அஜித், தயாநிதி அழகிரி தயாரிக்க இருக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் மங்காத்தா திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்த திரைப்படத்தில் அஜித் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருந்தார்.

Also read : துணிவு ஷூட்டிங்கில் அஜித்தை காண திரண்ட கூட்டம்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி

அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய அந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. இது குறித்து ஏற்கனவே அஜித் மற்றும் தயாநிதி அழகிரி இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். அப்போது அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருந்த புகைப்படம் கூட வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதற்கான வேலைகளும் தற்போது சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் அஜித் அடுத்தடுத்து ஐந்து திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். வலிமை திரைப்படம் நீண்ட வருடங்கள் இழுத்துவிட்டபடியால் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம். அதனால் அஜித்தின் ஆட்டம் ஆரம்பித்துள்ளது என்று கோலிவுட்டில் பேசி வருகின்றனர். இது அவருடைய ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

Also read : எல்லா மொழிகளியும் குறிவைக்கும் போனி கபூர்.. தீபாவளியை மறக்கடித்த அஜித்