வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கோலிவுட் வரலாற்றிலேயே இது தான் புது முயற்சி.. மார்க் ஆண்டனி படத்தில் இவ்வளவு சுவாரஸ்யங்களா!

நடிகர் விஷால் நடித்து நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா தயாரித்த லத்தி திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. லத்தி திரைப்படத்தை வினோத் குமார் இயக்கியிருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து விஷால் மார்க் ஆண்டனி என்னும் படத்தில் நடத்தி வருகிறார். இந்த படத்தை நடிகர் சிம்புவின் அன்பானவன், அடங்காதவன், அசாராதவன், பிரபு தேவாவின் பஹீரா திடரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Also Read: கதை விஷயத்தில் இயக்குனரை படாதபாடு படுத்தும் 5 நடிகர்கள்.. விஷால் செய்யும் பெரிய அக்கப்போர்

இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் எடுக்காத நிறைய புது முயற்சிகளை எடுத்து இருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன், எஸ் ஜெ சூர்யா இணைந்திருக்கிறார். இதில் இவர்கள் இருவரும் அப்பா மகனாக நடிக்கின்றனர்.

இவர்கள் இருவருமே டூயல் ரோலில் நடிக்கிறார்கள். நடிகர்கள் அப்பா மகனாக நடிப்பது கோலிவுட்டில் சாதாரணமாக நடக்கும் என்றாலும், இப்படி அப்பா மகன் இருவருமே டூயல் ரோலில் நடிப்பது என்பது இது தான் முதல் முறை.

Also Read: பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் விஷால்.. சிம்புவிற்கு இழைக்கப்பட்ட அநீதி

மேலும் இந்த படத்தில் விஷால், எஸ் ஜெ சூர்யா இருவருக்குமே மொத்தம் ஐந்து ஐந்து கெட்டப்புகளாம். இதுவும் இதுவரை யாரும் தமிழ் சினிமாவில் எடுக்காத புதிய முயற்சி தான். வெவ்வேறு காலகட்டத்தில் கதைக்களம் நடப்பது போல் இந்த படம் எடுக்கப்படுகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷாலின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் விஷால் தாடி, மீசை மற்றும் கையில் துப்பாக்கியுடன் இதுவரை பார்க்காத புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி, இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Also Read: விஷாலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்த வேலை.. இரவோடு இரவாக அவர் வீட்டில் நடந்த விபரீதம்!

Trending News