ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அவருக்கு நிகர் வேறு யாருமில்லை.. மொத்த அணியையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாகிஸ்தான் ஜாம்பவான்

இப்பொழுது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் ரன் மிஷின் என வர்ணிக்கப்படும் இரண்டு வீரர்கள் இருக்கின்றனர். ஒரு பிரிவினர்தான் அவர் தான் பெஸ்ட் எனவும் மற்றொரு பிரிவினர் இவர்தான் பெஸ்ட் எனவும் தங்களுக்குள் சண்டையிட்டு சமூக வலைதளத்தில் மல்லுக்கட்டுகின்றனர்
இது ஒருபுறமிருக்க நடைபெற்றுக்கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பாகிஸ்தான் அணி போராடி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்தியா தனக்கே உரிய பாணியில் விளையாடி பாகிஸ்தானை மண்ணைக் கவ்வ செய்தது.
எப்பொழுதுமே பாகிஸ்தான் மற்றும் இந்தியா போட்டிகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். ஆஸ்திரேலிய நாட்டில் மெல்போர்னில்  நடைபெற்ற இந்த போட்டியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் மைதானத்தில் போட்டியை கண்டுகளித்தனர். இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி இந்த போட்டியை  இந்தியாவிற்காக வெற்றி பெற்றுக்கொடுத்தார்.
விராட் கோலி ஆடிய விதம் இந்தியாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் கவர்ந்தது. ஆனால் அவர்கள் அதை வெளியில் தைரியமாகக் கூற மாட்டார்கள். இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் வீரர் விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவருக்கு நிகர் யாருமே இல்லை எனவும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
பாபர் அசாம்  தலைசிறந்த வீரர் தான் ஆனால் அவரை விராட் கோலியோடு ஒப்பிட முடியாது. அவர் உண்மையிலேயே கிங் தான். இந்தியா கிட்டத்தட்ட தோல்வியடையும் என எதிர்பார்த்த நிலையில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.
எப்படி விளையாடினால் போட்டியை கரை சேர்க்க முடியும் என  திட்டமிட்டு அபாரமான செயல்பட்டார்.ஆரம்பத்திலிருந்தே இந்த போட்டியை பாகிஸ்தான் அணி பக்கத்தில் அவர் விடவில்லை. கடைசி வரை களத்தில் நின்று பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டி விட்டார். அவரைப் பார்த்து பாகிஸ்தான் அணி வீரர்கள் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜாம்பவான் யூசுப் யூஹானா தெரிவித்துள்ளார்.

Trending News