செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

மரண அடியை கொடுத்த பிரின்ஸ்.. அடுத்த படத்தை சமாளிக்க முடியாமல் திணறும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பைலிங்குவல் திரைப்படமாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவர தவறிவிட்டது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிச்சயம் கலெக்ஷனில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்த்த இந்த படம் படக்குழுவினருக்கு மரண அடியை கொடுத்துள்ளது.

இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்க்காத இயக்குனரும், தயாரிப்பாளரும் தற்போது கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் இப்படம் தெலுங்கிலும் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது. ஆனால் எதற்கும் பலன் இல்லாமல் தற்போது இப்படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய தோல்வியை கொடுத்துள்ளது.

Also read : மீண்டும் அதே நிலமைக்கு வந்த சிவகார்த்திகேயன்.. படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்

இது அவருடைய அடுத்த படத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கும் இந்த திரைப்படத்தை அருண் விஷ்வா தயாரிக்கிறார். அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதனாலேயே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்வி தற்போது நிலமையையே தலைகீழாக மாற்றியுள்ளது. இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்ட படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நிச்சயம் மாவீரன் திரைப்படத்தை டார்கெட் செய்வார்கள்.

Also read : செக் வைக்கும் தயாரிப்பாளர்.. தலைவலி பிடித்த அயலான் படத்தால் நிம்மதியை இழந்து சிவகார்த்திகேயன்

ஏற்கனவே சிவகார்த்திகேயன் சீமராஜா, ரெமோ போன்ற திரைப்பட தோல்வியால் மிகப்பெரிய கடன் நெருக்கடியை சந்தித்தார். அதிலிருந்து அவர் இன்னும் முழுவதுமாக மீளவில்லை. இந்நிலையில் மீண்டும் பிரின்ஸ் திரைப்படம் அவருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்தப் பிரச்சினை மாவீரன் பட ரிலீஸுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் கலக்கத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்னும் ஆலோசனையில் இப்போது இருக்கிறார்.

Also read : மீண்டும் கடனாளியாக மாறும் சிவகார்த்திகேயன்.. தோல்வி பட வரிசையில் 5வது படம்

Trending News