பத்து தல முடிச்ச சிம்பு.. 12 வருடங்களுக்கு பின் கையில் எடுத்த சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம்

சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் பத்து தல படத்தின் சூட்டிங்கை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இன்னும் இந்த படத்தில் நான்கு நாட்கள் ஷூட்டிங் மட்டும் பாக்கி இருக்கிறதாம் . அது சென்னை சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.

சிம்பு இப்பொழுது இரண்டு இரண்டாம் பாகம் படங்களில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அந்த இரண்டு படங்களும் அவருக்கு சூப்பர் ஹிட்டானது. இதில் முதல் வெந்து தணிந்தது காடு படம் தான் நடிக்கப் போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது . ஆனால் இந்த படம் சிறிது காலம் எடுக்கும்.

இந்நிலையில் சிம்புவின் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன் உருவான திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆரம்பிக்க இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இப்பொழுது சிம்பு கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா 2ல் நடிக்க போகிறார். அதற்கான வேலைகள் எல்லாம் விரைவாக நடந்து வருகிறது. முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் கலந்து வெளிவந்த அந்த திரைப்படத்தில் திரிஷா, சிம்பு இருவரும் கார்த்திக், ஜெசி என்ற கதாபாத்திரமாகவே மாறி அசத்தியிருப்பார்கள்.

இப்போது வரை அந்த கேரக்டர்களை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு இளைஞர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம்தான் அது. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த திரிஷா மீண்டும் ஜெஸ்ஸியாக சிம்புவுடன் நடிப்பதற்காக படக்குழு அவருடன் பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது. விரைவில் படப்பிடிப்பும் துவங்கப் போகிறது.