திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே சமயத்தில் என்ட்ரி.. அகலக்கால் வைத்த டைமிங் நடிகரை பின்னுக்கு தள்ளி டாப் கியரில் சிவகார்த்திகேயன்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பிடித்தமான நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் கடும் போட்டியான நடிகராக மாறி உள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளையாக மாறி இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் இருவரும் ஒரே நேரத்தில்தான் சினிமாவில் அடியெடுத்து வைத்தனர்.

இருவருக்கும் வாழ்க்கை விஜய் டிவியிலிருந்து தான் ஆரம்பித்தது. இன்று சிவகார்த்திகேயன் உச்சத்தில் இருக்கிறார். ஆனால் சந்தானம் அவரைப்போல் வளரவில்லை என்பது அவருக்கு ஒரு பெரிய வருத்தமே. இதற்கு காரணம் சந்தானம் அகலக்கால் வைத்தது தான்.

Also Read: அடுத்தடுத்த வெற்றியால் உச்சாணி கொம்புக்கு சென்ற சிவகார்த்திகேயன்.. ஓவர் நைட்டில் சறுக்கி விட்ட பிரின்ஸ்

தொடக்கத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், அதன் பிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று நகைச்சுவை நடிகராக நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் உண்மையாகவே சந்தானத்தின் டைமிங், ரைமிங் காமெடிகள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைத்தது.

ஆகையால் நகைச்சுவை நடிகராக சந்தானத்தை பார்த்த மக்களுக்கு ஹீரோவாக பார்க்க பிடிக்கவில்லை. இருப்பினும் இதை உணராத சந்தானம் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் அவருடைய படங்கள் அனைத்தும் வரிசையாக படுதோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறது.

Also Read: இன்ஜினியரிங் கதைகளை வைத்து எடுக்கப்பட்ட 5 படங்கள்.. சிவகார்த்திகேயனுக்கு வசூலை அள்ளித் தந்த டான்

அதேசமயம் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தாலும் முதலில் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பின் திரும்பவும் அவர் காமெடியனாக கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பிறகு தான் இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இவ்வாறு நிதானத்துடன் செயல்பட்ட சிவகார்த்திகேயன் சந்தனத்தை விடதற்போது டாப் கீரில் சென்று கொண்டிருக்கிறார். மேலும் சந்தானம் சிவகார்த்திகேயனை போல் இல்லாமல் இப்பவும் தன்னுடைய ஈகோவை குறைத்துக் கொள்ளவே இல்லை. அதனால் தான் சிவகார்த்திகேயனைப் போல் சந்தானம் வளரவில்லை.

Also Read: மரண அடியை கொடுத்த பிரின்ஸ்.. அடுத்த படத்தை சமாளிக்க முடியாமல் திணறும் சிவகார்த்திகேயன்

Trending News