சினிமாவை பொறுத்தவரையில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைப்பதாக சில நடிகைகள் சமீபத்தில் பேட்டி கொடுத்து வருகிறார்கள். சில நடிகைகள் இதை மறுத்தால் அவர்களுக்கு பட வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது. அவ்வாறு அட்ஜஸ்மெண்டுக்கு மறுத்ததால் 300 படங்களை இழந்ததாக ஒரு நடிகை கூறியுள்ளார்.
சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து வரும் இந்த நடிகை வெள்ளிதிரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நுழையும் போது தான் சந்தித்த இக்கட்டான பிரச்சனைகளை ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும்போது வெளிப்படையாக பேசி உள்ளார் நடிகை.
Also Read : அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி
அதாவது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஜீவிதா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரது அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் எதுவாக இருந்தாலும் மிகவும் துணிச்சலாக பேசக்கூடியவர்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததை தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய ஜீவிதா பட வாய்ப்பு வேண்டும் என்றால் இயக்குனர், நடிகர், மேனேஜர் என அனைவரையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று அழைத்ததாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
Also Read : அக்ரிமெண்ட் போட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்த முதலாளி.. நடிகைகளை மிரட்டியே கட்டுப்பாட்டில் வைத்த கொடூரம்
மேலும் அட்ஜஸ்ட்மெண்ட்காகவே கிட்டதட்ட 300க்கும் அதிகமான படங்களை தவறவிட்டு உள்ளேன் என்று ஜீவிதா கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். திறமை இருந்தும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று அந்த நேரத்தில் மன உளைச்சலுக்கு ஜீவிதா தள்ளப்பட்டதாக கூறியிருந்தார்.
இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஓரிரு படங்கள் என்றால் கூட ஒத்துக்கொள்ளலாம் 300 படங்கள் அட்ஜஸ்ட்மெண்டால் நிராகரிக்கப்பட்டது என்றால் புளுகலாம் அதுக்குன்னு ஏக்கர் கணக்கில் புளுக்கலாமா என ஜீவிதாவை வறுத்தெடுத்து வருகிறார்கள். மேலும் திறமையினால் மட்டுமே தமிழ் சினிமாவில் ஜொலித்த பல நடிகைகள் இப்போதும் உள்ளனர்.
Also Read : அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்த நடிகை.. குரூர தண்டனை கொடுத்து பழிவாங்கிய இயக்குனர்